.

Thursday, December 14, 2017

ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றி ....
போராட்டத்தின்  வெற்றி....

வாழ்த்துகள் தோழர்களே!

சிங்கம் போல் பெருமிதத்துடன் பணிக்குத் திரும்புங்கள், சரித்திரம் படைத்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்ற வீரர்களே!”
      இது தோழர் D. ஞானையா அன்று எழுதியது.
     இன்றைக்கு B.S.N.L.– இரண்டு நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தை  வெற்றிகரமாக்கிய தோழர்களுக்கு வீர வாழ்த்துகள்!
     இந்த உணர்ச்சிகரமான போழ்து தோழர் டி. ஞானையாவின் “GLIMPSES OF A UNIQUE UNION” நூலின் சில வரிகளை நினைவூட்டியது:
            “NFPTE தனது கண்ணில் விழுந்து எரிச்ல் ஏற்படுத்தும் உறுத்தலாகவே எப்போதும் அரசாங்கம் எண்ணி வந்தது. 1957ல் நேரு அரசிற்கு எதிராக ஊழியர்களை ஒன்று திரட்டி (முதல்) போராட்ட அறைகூவல்விட காரணமே P & T தொழிலாளர்களிடையே ஒற்றுமையை உயர்த்திப்பிடித்த NFPTE தான் என அரசு கருதியதுஅந்தப் போராட்ட அறைகூவலே நேரு அரசை பல கோரிக்கைகளை   –அதுவும் போராட்டம் துவங்குவதற்கு முன்பேஏற்க வைத்தது.
     மீண்டும் மத்திய அரசு ஊழியர்களின் 1960 புகழ் பொதிந்த ஐந்து நாள் வேலைநிறுத்தம் ( மத்திய அரசைக் குலுக்கிய அந்தப் புகழ் பொதிந்த ஐந்து நாட்கள்FIVE GLORIOUS DAYSதோழர் எஸ்,. டாங்கே பயன்படுத்திய வார்த்தை ) தபால் தந்திப் பிரிவில் மிக பலம் வாய்ந்ததாக நடைபெற்றது.

         ஜெசிஎம்ல் NFPTE எழுப்பிய கோரிக்கைகளே 1968 செப்டம்பர் 19 ஒருநாள்  வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு அடி கோலியதுமேலும்   P & T யிலேயே போராட்டம் உக்ரமாக நடைபெற்றதுஅது மட்டுமல்ல, (வேலை நிறுத்தத்தைத் தொடர்ந்த அரசின் பழிவாங்குதல்களைத் துடைக்க ) அதன் பின்னர் விதிப்படி வேலை இயக்கம் P & T ல் ஏறத்தாழ ஒருமாதம் நடைபெற்றதுஇவையெல்லாம் அரசை மிரளச் செய்தது. “ இது நம் மரபு.

                போராட்டப் பாதையில் தொடர்ந்து பயணிப்போம்வெற்றி நமதே !
                                                                                                                தோழமையுடன் 
                                                                                                                        இரா.ஸ்ரீதர் 
                                                                                                                 மாவட்டச் செயலர், 
                                                                                                                             கடலூர் .

No comments:

Post a Comment