.

Thursday, December 7, 2017

தமிழ் மாநில ஊழியர் நலக்குழுவின் கூட்டம்


            நேற்று 05-12-2017 மாநிலத் தலைமையகத்தில் சில ஆண்டுகளுக்குப் பிறகு கூடியது. மாநிலத் தலைமைப் பொது மேலாளர் திரு. ஆர். மார்ஷல் லியோ அன்டனி அவர்கள் தலைமையில் நடைபெற்றதுNFTE பிரதிநிதியும் கடலூர் மாவட்டச் செயலருமான தோழர்   இரா. ஸ்ரீதர் கலந்து கொண்டார். கூட்ட முடிவுகள் சுருக்கமாகப் பின்வருமாறு : (அதிகாரபூர்வ கூட்ட நடவடிக்கைக் குறிப்புகள் பின்னர் வெளியாகும் )

        மாநில நலக்குழுப் பிரிவின் அணுகுமுறை மற்றும் சிறப்பான கூட்ட ஏற்பாடுகளுக்கு நமது பாராட்டுதல்கள்கூட்டம் குறித்து இரண்டு மூன்று முறை தொடர்பு கொண்டு நினைவூட்டல் மற்றும் உறுதி செய்தல், ஊழியர் தரப்புப் பிரதிநிதிகள் முன்வைக்கும் கோரிக்கைகளின் தேவை மற்றும் அதன் மீதான கூடுதல் விவரங்களைக் கேட்டறிவதில் அக்கறை முதலியன பாராட்டப்பட வேண்டிய நல்ல அணுகுமுறை. நமது நன்றியும் பாராட்டுதல்களும்இதே அணுகுமுறை மாவட்டங்களிலும் பின்பற்றப்பட வேண்டும் என்பதே நமது விழைவு.

        சென்ற கூட்டம் 29-11-2013 ல் நடந்ததுஅதன் பின்னர் புதிய தலைமைப் பொது மேலாளர் பொறுப்பேற்று நேற்றுதான் நடைபெற்றதுஇவ்வளவு நீண்ட தாமதத்திற்கு நிர்வாக ரீதியாகவும், சில குழு உறுப்பினர்கள் பதவி ஓய்வு பெற்றதுமே காரணம் என நிர்வாகத் தரப்பில் விளக்கம் தரப்பட்டது. பொதுவாக நிர்வாக ரீதியான காரணம் என்பதைத் தவிர பிற செய்திகள் முழு உண்மை அல்ல என்பது சுட்டிக்காட்டப்பட்டதுமாநிலக் குழுவின் கூட்டம் ஆண்டுக்கு இரு முறை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை தற்போது சாத்தியமல்ல என்ற போதும் ஆண்டுக் கூட்டம் தவறாது கூட்டப்பட வேண்டும் என்பது ஏற்கப்பட்டது.

மாவட்டங்களில் ஊழியர் நலக் குழுகள் :  எந்தெந்த மாவட்டங்களில் குழுகள் அமைப்பு இல்லையோ, அத்தகைய மாவட்டங்களிலெல்லாம் முறையான நலக் குழுக்கள் அமைக்கப்பட வேண்டும் என்பது ஏற்கப்பட்டதுமாவட்டங்களில் குழுக் கூட்டம் வருடத்திற்கு இரண்டு முறை கூட்டப்பட வேண்டும் என்பது நமது கோரிக்கைமாவட்டங்களின் தேவைக்கு ஏற்ப கோரிக்கைகள் பரிசீலிக்கக் கூடி ஆலோசிப்பது மறுக்கப்படவில்லை.
மாவட்டக் குழுவின் அதிகாரம் : Spl Welfare Fund சிறப்பு நல நிதி மாவட்டத்திற்கென வசூலிக்கப்படுவதுஅதனை செலவிட முடிவு செய்வதில் மாவட்டத்திற்கே அதிகாரம்; எனவே, மாவட்டக் குழு முடிவுகள் மாநிலக் குழுவின் மேல் அங்கீகாரத்திற்கு அனுப்பத் தேவையில்லை என்ற ஊழியர் தரப்பு வாதம் ஏற்கப்பட்டது.

திருமணக் கடன் : தற்போது ரூபாய் ஐம்பதாயிரம் வழங்கப்படுகிறதுஇதனை ஒரு லட்சமாக உயர்த்த வேண்டும் என்பது கோரிக்கைவிவாதங்களுக்குப் பிறகு அது ரூபாய் 60,000 ஆக உயர்த்தப்படுகிறது.

        சில மாவட்டங்களில் நிதி இருப்பைப் பொறுத்துத் தற்போது திருமணக் கடன் ரூபாய் 75,000 வழங்கப்படுகிறது. வேலூர் மாவட்டத் தோழர்களின் கோரிக்கை ஒரு லட்சம்மாநிலக்குழுவின் முடிவு ரூபாய் அறுபது ஆயிரத்திற்கு மேல் வழங்கிட நிதி நிலமையைப் பரிசீலித்து மாவட்ட நலக்குழுக்களே முடிவு செய்து கொள்ளலாம் என்பதேஎனவே வாய்ப்புள்ள இடங்களில் திருமணக்கடன் கூடுதலாக வழங்குவது தொடரும்.

        ஊழியர்களின் சேவைப்பதிவு ஆவணங்களில் பாரம் 3 குடும்ப விவரங்களோடு ஒப்பிட்டு திருமணக்கடன் மறுக்கவோ தாமதிக்கவோ கூடாது என்பது ஏற்கப்பட்டதுகுறைந்த பட்ச அடிப்படைத் தகவல்களின் உண்மை தன்மை சரிபார்க்கப்படுவது மட்டுமே போதுமானது என்ற நமது வாதம் ஊழியர்களுக்கு உதவுவதான நலக்குழுவின் நோக்கம் முழுமையாக நிறைவேற்றப்பட வேண்டும் என்பது ஏற்கப்பட்டதுகுழுவிற்கு நமது நன்றி.

ஓய்வு பெறுவோருக்கான பரிசு : ( Retirement Grant from SWF ) தற்போதைய ரூபாய் 2000/= ரூபாய் 3000/= ஆக உயர்த்தப்படுகிறது. இது தவிர்த்து சூட்கேஸ், பொன்னாடை இவற்றிற்கு அதிக பட்சம்   ரூ 3751/= என்பது மாற்றப்படவில்லை.

மரணத் துயர் நிதி ( Consolation Death Grant ) : ஊழியர் மறைவால் குடும்பத்திற்கு வழங்கப்படும் உடனடி துயர் துடைப்பு நிவாரணம் தற்போது மத்திய நல நிதியிலிருந்து ரூ 15,000 என்பது மாற்றமின்றித் தொடரும். மாவட்டச் சிறப்பு நல நிதியிலிருந்து வழங்கப்படும் ரூ 3000/= என்பது ரூபாய் 5,000 ஆக உயர்த்தி வழங்கிட முடிவு செய்யப்பட்டது.

முழு உடல் பரிசோதனை : தற்போது 50 வயதிற்குக் கீழ் என்றால் ரூ 1,000 /= 50 வயதிற்கு மேல் என்றால் ரூ 1,500/= என்பது நடைமுறையில் உள்ளது. MRS வவுச்சர் திட்டத்தில் பரிசோதனைக்கு ரூ3500/= அனுமதிக்கப்படுவதால் நலத்திட்டத்தில் இதனை நிறுத்திவிடலாம் என்ற  நிர்வாகத்தின் ஆலோசனை முன் வைக்கப்பட்டதுஅதிகாரிகளுக்கு முன்பு இத்தகைய இரண்டும் அனுமதிக்கப்பட்டதால் நிறுத்துவது முறையாகாது; மேலும் MRS உச்சவரம்புக்கு உட்பட்டது என்பதாலும் ஊழியர் தரப்பு இந்த ஆலோசனையை ஏற்க மறுத்ததுவிவாதங்களுக்குப் பிறகு இறுதியில் முழு உடல் பரிசோதனைக்கான நலநிதி உதவி சேவைக் காலத்தில் ஒருமுறை ரூபாய் 1,500/= வழங்குவது என முடிவு செய்யப்பட்டது.

மாவட்ட விளையாட்டுக் குழு சந்தா : நல நிதியிலிருந்து வழங்குவதற்கு மாறாக மாவட்டங்கள் தனியாக வசூலிக்கலாம் என்பது முடிவு.

காசாளருக்கான சிறப்புப் படி: ERP முறை அமலாகி உள்ளதால் நலநிதியிலிருந்து காசாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் சிறப்புப் படியை நிறுத்தி விடலாம் என்பது முன் வைக்கப்பட்டதுஊழியர் தரப்பு வற்புறுத்தலால் இதனைத் தொடர்ந்து வழங்குவது என்று முடிவு செய்யப்பட்டது.  

RGM TTC கோரிக்கை : மாவட்டங்களிலிருந்து பயிற்சிக்கு வரும் ஊழியர்களின் பயன்பாட்டிற்காக விளையாட்டுச் சாதனங்கள் வாங்கிட ஒருமுறை மட்டும் நிதி உதவி கோரப்பட்டது. இந்தக் கோரிக்கையைத் தனியாக பின்னர் ஆராய்வது என்று முடிவு செய்யப்பட்டது.

தமிழகத் தொலைத் தொடர்பு பெண்கள் அமைப்பு (TTWO) : ஆண்டுக்கு ரூபாய் 25,000/= நிதி வழங்கிட இந்த அமைப்பின் சார்பில் கோரிக்கை எழுப்பட்டதுரூபாய் 15,000 /= வழங்குவது என்பது முடிவு.

மருத்துவ முகாம்கள் நடத்துவது  : மியாட் மருத்துவ மனை நடத்திட முன்வருகிறதுஆனால் மாவட்டங்களில் MOU மருத்துவ மனைகள் குறைவுகடலூரில் இல்லை என்றே சொல்லலாம்நமது நிறுவனத்துடன் அரவிந்த் கண் மருத்துவ மனைகள் போன்றவை MOU கையெழுத்திட முன்வருவதில்லைகாரணம் அவர்களுக்கான கட்டண பில்கள் முழுமையாக வழங்குவதில்லை என்பது புகார்நமது நிறுவனம் முழுமையாகக் கட்டணங்களை வழங்கி விட்டது என்பதையும் நம்மால் நிரூபிக்க முடியவில்லை. காரணம், ERP வென்டர் முறை கோளாறுகள். ERP வென்டர் முறை முதலியன நவீன முன்னேற்றச் செயல்பாடுகள் என்றாலும் அவை உபயோகிப்பாளர் நட்புடன் அமையவில்லை என்பது எடுத்துக்காட்டப்பட்டதுஇதனை ஏற்றுக் கொண்ட நிர்வாகத் தரப்பு குறைகள் களைய AO (ERP) அவர்களுக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதுகுறைகள் களையவும் மருத்துவ மனைகளுடன் MOU ஏற்படவும் உறுதியளிக்கப்பட்டுள்ளதுஇதனால் ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களின் மருத்துவத் தேவை சமூக அக்கறையுடன் பராமரிக்கப்படும்மாநில நலநிதிக் குழுவின் முடிவிற்கு நமது நன்றி.

மனமகிழ் மன்றங்கள்  :  மனமகிழ் மன்றங்கள் சார்பாக சுற்றுலா செல்ல நிதி வழங்கும் முறைமைகள் பற்றிய விதிகள் உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டதுமாவட்டங்களுக்கும் அனுப்பப்படும்விதிகளின் படி மனமகிழ் மன்றங்களின் செயல்பாடுகளை முறைப்படுத்தி நலநிதி உதவிகளைப் பெறுவதில் தலமட்ட ஊழியர்கள் ஆர்வம் காட்ட வேண்டுகிறோம்.

மூக்குக் கண்ணாடி நிதி உதவி  :  தற்போதைய ரூ800/= என்பது ரூ1500 /= ஆக உயர்த்தப்படுகிறதுசேவை காலத்தில் இரண்டு முறை பெறலாம். முதல் தடவையை அடுத்து ஐந்தாண்டுகளுக்குப் பிறகே இரண்டாவது முறை வழங்கப்படுகிறது.          

        நம்முடைய வற்புறுத்தலை ஏற்று முந்தைய கூட்டத்தின் தேக்கமடைந்த பிரச்சனைகள் விவாதிக்கப்பட்டனஅதில் மிக முக்கியமானது வங்கிக் கடன்கள் வழங்குவதில் வங்கிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்கையில் காப்பீட்டு அம்சமும் கட்டாயமாகச் சேர்க்கப்பட வேண்டும் என்பதுகாப்பீட்டு பாதுகாப்பு அம்சம் இடம் பெறாத நிலையில் அகால மரணடையும் ஊழியர்களின் கடன் நிலுவை குடும்பத்தினருக்கு கூடுதல் சுமையாகிவிடுவது சுட்டிக்காட்டப்பட்டதுகாப்பீட்டு அம்சம் சேர்க்கப்பட்டால், நிலுவைத் தொகை வங்கிகளுக்குக் காப்பீட்டால் சரிசெய்யப்படும் ; துயருரும் குடும்பத்தினர் சுமை நீங்கும்இது சட்டப்படியான ஒரு பாதுகாப்பேநமது வாதம் ஏற்கப்பட்டது.

        அதே போல இன்னொரு பிரச்சனை நலநிதிக் கடன் நிலுவை பற்றியது.  ERP முறையில் நிலுவையை அறிந்து கொள்ளும் வசதி இல்லைஇதனால் ஓய்வுக்காலப் பயன்கள் பெறுவதில் கடும் தாமதம் நிலவுவது எடுத்துக்காட்டப்பட்டதுசரி செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

        மொத்தத்தில் மிகவும் மன நிறைவும் முடிவுகளும் எடுக்கப்பட்டக் கூட்டமாக இது அமைந்ததுகூட்டத்திற்கு முன்பாக மாநில உதவிச் செயலர் தோழர் G. S.  முரளி மற்றும் RGM TTC கிளைச் செயலாளர் தோழர் சீனுவாசன் அவர்களுடன் தோழர் இரா ஸ்ரீதர் பிரச்சனைகள் குறித்து முன்னாலோசனை நடத்தியது மிக உதவியாக இருந்தது

        நலநிதிக் குழுத் தலைவரும் தமிழ் மாநிலத் தலைமைப் பொதுமேலாருமான திரு ஆர். மார்ஷல் லியோ ஆன்டனி அவர்களுக்கும் நிர்வாக மற்றும் ஊழியர் தரப்பு இதர உறுப்பினர்களுக்கும் நன்றிமீண்டும் ஒருமுறை மாநில நலநிதிப் பிரிவு அனைத்துப் பொறுப்பாளர்களுக்கும் நமது நன்றியும் பாராட்டுதல்களும்.

        ”ஒருவருக்காக அனைவரும், அனைவர் நலனுக்காக ஒவ்வொருவரும் என்ற உயர்ந்த சமூகக் குறிக்கோளுடன் செயல்படும் நலநிதிச் செயல்பாடுகளில் ஊழியர்கள் மேலும் ஆர்வத்துடன் பங்கேற்க அழைக்கிறோம். இது நாம் நமக்காக செயல்படுத்தும் அமைப்பு. அதனை மேலும் செழுமையாக்குவோம்!
தோழமையுடன்
               இரா.ஸ்ரீதர்
 ( Welfare Board Member )
    மாவட்டச் செயலர்,NFTE
      கடலூர்.
     


                  

No comments:

Post a Comment