.

Friday, January 27, 2017

NFTE - TMTCLU
தமிழ் மாநில தொலைத்தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கம்
 மாநிலந் தழுவிய கருத்தரங்கம் – கடலூர்.

தீர்மானங்கள்
1 நமது NFPTE மத்திய சங்கம் 1986-ல் CPWD இலாக்கா ஊழியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பினை தொலைத்தொடர்பு இலாக்காவில் பணிபுரியும் மஸ்தூர் தோழர்களுக்கும் அமுல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வைத்து NFPTE  சம்மேளனம் 1986-ல்  போராடி பெற்று தந்தது போல 26-10-2016 அன்று உச்ச நீதிமன்றம் வழங்கிய  சம வேலைக்கு சம ஊதிய தீர்ப்பினை BSNL  பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களுக்கு  அமுல்படுத்தப்பட வேண்டும் என்று BSNL  நிர்வாகத்தினை கேட்டுக் கொண்டு அதனை கறாக அமுல்படுத்திட நமது NFTE மத்திய சங்கம் முயற்சி எடுத்திட வேண்டும் என இக் கருத்தரங்கத்தின் வாயிலாக கேட்டுக் கொள்கிறோம்..
2.பணி தன்மைக்கேற்ப ஊதியம்
        தமிழ் மாநில முழுவதும் BSNL-ல் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களின் பணித்தன்மைக்கேற்ப ஊதியம் கேரளா மாநில BSNL நிர்வாகம் வழங்குவது போல் தமிழ் மாநிலத்திலும் வழங்க வேண்டும் என்று மாநில நிர்வாகத்தை கேட்டு  வந்தோம். மாநில நிர்வாகம் மத்திய அலுவலகத்திற்கு ( காப்பரேட் அலுவலகம்) பணித்தன்மைகேற்ப ஊதியம் வழங்கிட விளக்கம் கோரி கடிதம் எழுதப்பட்டுள்ளது. ஊதியத்தை விரைவில் பெற்றிட மத்திய சங்கம் நடவடிக்கை எடுத்திட இக்கருத்தரங்கம் கேட்டுக் கொள்கிறது.
3.போனஸ்
BSNL தமிழ்  மாநில நிர்வாகம் நமது மாநில சங்கத்துடன் ஒப்புக்கொண்டு போடப்பட்ட உத்தரவின் அடிப்படையில் தமிழ் மாநிலம் முழுவதும் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களுக்கு குறைந்த பட்ச போனஸ் 8.33 , ரூ 7000/- வழங்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் போடும் ஒப்பந்த புள்ளி படிவத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று மாநில நிர்வாகத்தை இந்த கருத்தரங்கம் கேட்டுக் கொள்கிறது

4.தமிழ் மாநில நிர்வாகம் நமது மாநில சங்க நிர்வாகிகளோடு 20.10.2016 அன்று நடைபெற்ற பேச்சு வார்த்தையில் எல்லா மாவட்ட நிர்வாகத்திற்கும் கடிதம் எழுதியது . ESI.EPF  பிடித்தம் செய்த முறையாக கட்ட வேண்டும். அடையாள அட்டை வழங்க வேண்டும். 8 மணி நேர வேலை ஊதியம் ( 8 மணி நேர வேலை செய்து 6 மணி நேரத்திற்கு ஊதியம் வழங்கும் இடங்களில்) . மாதம் 7ந் தேதிக்குள் ஊதியம் பட்டுவாட செய்ய வேண்டும். ஒப்பந்த ஊழியர்களின் கோரிக்கையை தீர்ப்பதற்கு ஒரு கண்கானிப்பு அதிகாரி நியமனம் செய்து 30.11.2016க்குள் மாநில நிர்வாகத்திற்கு பதில் கொடுக்க வேண்டும் என்று கடிதம் எழுதியது . பல மாவட்ட நிர்வாககங்கள் அதனை அமுலாக்கம் செய்யவில்லை. உடனடியாக மாநில நிர்வாகம் தலையிட்டு அமுலாக்கிட உறுதி  செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றோம்.
5. BSNL ஒப்பந்த ஊழியர்கள் அனைவருக்கும் உச்சநீதி மன்ற தீர்ப்பை அமுல்படுத்தி சமவேலைக்கு சம ஊதியம் பெற்றிட மத்திய சங்கம் AITUC-யின் அறைகூவல்  அனைத்தினையும் TMTCLU தமிழ்மாநில சங்கம் வெற்றிகரமாக்கிட வேண்டும் என்று கருத்தரங்கம் கோருகிறது.
6. BSNL ஒப்பந்த ஊழியர்களுக்கு சமவேலைக்கு சம ஊதியம் அமுல்படுத்திட உச்ச நீதிமன்ற தீர்ப்பை DOT / BSNL  வழிமொழிந்திட செய்யுமாறு NFTE  மத்திய சங்கத்தை இக்கருத்தரங்கம் கேட்டுக் கொள்கிறது.
7. உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமுல்படுத்தி தமிழ் மா நிலத்தில் BSNL  ஊழியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகள் தீர்வு காண தோழமை சங்கங்களுடன் இணைந்து போராட்டம் நடத்திட இக்கருத்தரங்கம் கேட்டுக் கொள்கிறது.
8. கருத்தரங்கம்  முன்வைத்த தீர்மானங்களை அனைத்து மாவட்டங்களில் விழிப்புணர்வு உருவாக்கிட NFTE  சங்கத்துடன் இணைந்து பிரச்சாரக் கூட்டங்கள் பிப்ரவரி மாத இறுதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று இக்கருத்தரங்கம் கேட்டுக் கொள்கிறது.

தோழமையுடன்

ஆர்.கே                  M.விஜய் ஆரோக்யராஜ்              R.செல்வம்
                           தலைவர்                          பொருளாளர்                   பொதுச் செயலர்


TMTCLU,

No comments:

Post a Comment