.

Tuesday, November 22, 2016

தமிழ் மாநில தொலைத்தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கம்
மாவட்ட சங்கம். கடலூர்.

மாவட்ட செயற்குழு

            20-11-2016 அன்று  நமது NFTE  மாவட்ட சங்க அலுவலகத்தில் TMTCLU சங்கத்தின் மாவட்ட செயற்குழு காலை 10.00 மணிக்கு மாவட்ட தலைவர் தோழர் M.S.குமார் அவர்களின் தலைமையில் துவங்கப்பட்டது. தோழர் R.மலர்வேந்தன் கிளைச் செயலர்-NFTE,NKM வரவேற்புரை நிகழ்த்தினார். துவக்கவுரையாக நமது மாவட்ட செயலர் தோழர் G, ரங்கராஜ் உரையாற்றினார். தோழர்கள் மணிகண்டன்,  பாலகணபதி, அண்ணாதுரை,கிருஷ்ணகுமார்,சுரேஷ்,உதயசூரியன், சக்திவேல், பிரபு, பாலமுருகன் மற்றும் பல தோழர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். NFTE யின் மாநில துணைத் தலைவர் V.லோகநாதன் மாநில சங்க சிறப்பு அழைப்பாளர் தோழர் V.இளங்கோவன், NFTE மாவட்டச் உதவி செயலர்கள் தோழர் D.குழந்தைநாதன்,  D.ரவிச்சந்திரன் மற்றும் A.S குருபிரசாத் அவர்களும், NFTE  முண்னனி தோழர்கள் S.ரவி SS,  R.நந்தகுமார் JE, GM அலுவலக கிளைச் செயலர் தோழர் S.ராஜேந்திரன் , மற்றும் பலர் வாழ்த்துரை வழங்கினார்கள். தோழர் சு.தமிழ்மணி மாநில இனைப் பொதுச் செயலர் அவர்களும், தோழர் இரா.ஸ்ரீதர் மாவட்ட செயலர் NFTE அவர்களும் சிறப்புரைற்றினார்கள். நிறைவுறையாக நமது பொதுச் செயலர் தோழர் R. செல்வம் உறையாற்றினார்.

        இறுதியாக தோழர் சுரேஷ் அவர்கள் நன்றியுரை கூறினார்.

        இனிய தேனீர் வழங்கிய P.வீரமணி, NFTE கிளைச் செயலர் தோழர் S.ராஜேந்திரன் அவர்களுக்கும் மற்றும் மதிய உணவு ஏற்பாடு செய்த நமது பாசமிகு மாவட்ட செயலர் இரா.ஸ்ரீதர் அவர்களுக்கும்  மாவட்ட சங்கத்தின் சார்பாக நன்றியை உரித்தாக்குகிறோம்.

                 மாவட்ட செயற்குழுவில் கலந்து கொண்டவர்கள் 



மாவட்ட செயற்குழுவில் கீழ்கண்ட தீர்மானங்கள் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டன.

தீர்மானங்கள்
1.    சம வேலைக்கு சம ஊதியமும்  – உச்ச நீதிமன்ற தீர்ப்பும் மா நிலந்தழுவிய கருத்தரங்கத்தை கடலூரில்  டிசம்பர் இரண்டாவது வாரத்தில் நடத்துவது.

2.    2015-16 ஆண்டிற்க்கான விடுபட்ட போனஸ் வழங்கிட வேண்டும். மற்றும் புதிய டெண்டரில் 8.33 போனஸ் அல்லது ரூ 7000/- குறிப்பிட வேண்டும்.
3.    ஒப்பந்தகாரர் மாறினாலும் ஒப்பந்த ஊழியர்களின் பணிக்கு உத்திரவாதம் அளிக்க வேண்டும்
4.    BSNL விடுமுறை நாட்களுக்கும் ஊதியம் வழங்க வேண்டும்.
5.    செக்யூரிட்டி பணி செய்யும் ஒப்பந்த ஊழியர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும்.
6.    அடையாள அட்டையில் மாவட்ட நிர்வாகம், ஒப்பந்தகாரர் இருவரும் கையெழுத்திட்டு அனைத்து தொழிலாளர்களுக்கு  வழங்க வேண்டும்.
7.    25-10-2016-ல் மாநில  நிர்வாகம் வெளியிட்ட உத்திரவை கறாராக அமுலபடுத்திட வேண்டும்.
8.    மாவட்ட ஆட்சியர் நிர்ணயித்த குறைந்தபட்ச ஊதியத்தை உடணடியாக வழங்க வேண்டும்.
9.    A/C பிளாண்ட் பணியினை செய்யும் தோழர்களை HOUSE KEEPING  TENDER-ல் சேர்த்திட வேண்டும்.
10. நமது மாவட்டத்தில்  இறந்த போன இரண்டு தோழர்களின் கும்பத்தாருக்கு நிதியுதவியாக ஒவ்வொரு தோழர்களும் ரூ 100/- அளித்திட வேண்டும்.  


தோழமையுடன்
 G.ரங்கராஜ்
  மாவட்ட செயலர்-TMTCLU

No comments:

Post a Comment