.

Friday, July 1, 2016

நலந்தானா திட்டம் அறிமுகம்
நமது தொலைத்தொடர்பு சேவையை பயன்படுத்தும் சந்தாதாரர்களை அவர்களது இல்லத்திற்கே சென்று சந்திக்கும் மாநில நிவாகத்தின் புதிய திட்டமான “நலந்தானா”இன்று துவங்குகிறது.
திட்டத்தின் நோக்கம் நமது தொலைத்தொடர்பு சேவையின் தரத்தில் சந்தாதாரர் மன நிறைவுடன்  உள்ளார்களா? குறை ஏதும் இருக்கிறதா என்பதை அவர்கள் இல்லம் தேடிச்சென்று அறிவது; அது மட்டுமல்ல,  அந்தக்குறைபாட்டை உடனுக்குடன் சரிசெய்து தருவது, இதற்கென ஒவ்வொரு தொலைபேசி நிலையத்திலிருந்தும் அதிகாரி, JTO, JE, TelecomTechnician முதலானவர்களுடன்  சங்கப்பிரதிநிதிகளையும்  அழைத்து செல்ல வழிகாட்டுதல் தரப்பட்டுள்ளது.
ஒவ்வொரு தொலைபேசி நிலையத்திலிருந்தும் 1.5 கி.மீசுற்றளவில் உள்ள BroadBand  சந்தாதாரர்களை மையப்படுத்தி செயல்படுத்தப்படும். நமது தோழர்கள் தங்களை முழுமையாக  இந்த மக்கள் இயக்கத்தில் பங்கேற்க வேண்டுகிறோம்.
பணியாற்றும் இடத்தில் “புன்னகையுடன் சேவை” என்பதுடன் சந்தாதாரர் இல்லத்திற்கே நாடிச்செல்வதாக வளர்ச்சி பெற்றுள்ளது.
இதன் வெற்றி நமது BSNL நிறுவன வணிகப்பெருக்கத்தை உறுதிப்படுத்தும்!

நமது பங்கேற்பை உறுதி செய்வோம்!!

No comments:

Post a Comment