.

Saturday, January 31, 2015

கடலூர் BSNL ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் கூட்டமைப்பு
சார்பில் நட த்தப்பட்ட
மாநிலம் தழுவிய கருத்தரங்க காட்சிகள்
















Friday, January 30, 2015





தோழர்கள் கவனத்திற்கு 
கருத்தரங்கம் நடைபெறும் சுப்புராயலு ரெட்டியார் திருமண மண்டபம் கடலூர் போஸ்ட் ஆபீஸ் பேருந்து நிறுத்தத்திற்கு அருகில் அமைந்துள்ளது 
பாண்டிசேரி மற்றும் பண்ருட்டி மார்க்கமாக வருபவர்கள் வரும் வழியில் போஸ்ட் ஆபீஸ் பேருந்து நிறுத்தத்தில் இறங்கவும் . ரயில் மார்க்கமாக வருபவர்கள் திருப்பாதிரிபுலியூர் (TDPR ) நிலையத்தில் இறங்கி பேருந்து அல்லது ஷேர் ஆட்டோ மூலமாக போஸ்ட் ஆபீஸ் பேருந்து நிறுத்தத்தில் இறங்கவும் .
வரைபடம்



Tuesday, January 27, 2015


அரகண்டநல்லூர் கிளை புனரமைப்பு கூட்டம்

அரகண்டநல்லூர் கிளை புனரமைப்பு கூட்டம் திருக்கோயிலூர் லஷ்மிபாலாஜி திருமணமண்டபத்தில் இன்று (27-01-2014) செவ்வாய் காலை 10.30 மணியளவில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. கூட்டத்திற்கு மாவட்ட அமைப்புசெயலர் தோழர்.A.ரவிசந்திரன் தலைமையேற்றார். தோழர். S.கார்த்திகேயன் வரவேற்புரை, தோழர்.K.கோபு அஞ்சலி உரையாற்றினர். மாநில துணைத்தலைவர் தோழர்.V.லோகநாதன் துவக்கவுரையாற்றினார். பின் தோழர்.V.இளங்கோவன் அரகண்டநல்லூர் கிளை புனரமைப்பு ஏன்? எதற்கு? என்ற விளக்கத்தை எடுத்துரைத்தார். அதனைத் தொடர்ந்து புதிய கிளை நிர்வாகிகளாக தலைவர்,செயலர்,பொருளர் முறையே தோழர்கள் K.கோபு-TM, பழனிவேலு-TTA, K.சீனிவாசன்-Sr.TOA ஆகியோர் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.   இவ்வறிவிப்பை மாவட்டதலைவர் தோழர்.R.செல்வம் கூற அனைவரும் கரகோஷமிட்டனர். பிறகு மாவட்டதலைவர் தோழர்.R.செல்வம், TMTCLU மாவட்டசெயலர் தோழர்.G.ரங்கராஜு, மாவட்ட உதவிசெயலர்கள் தோழர்கள் P.அழகிரி, ரவிச்சந்திரன், D.குழந்தைநாதன், கள்ளக்குறிச்சி கிளைச்செயலர் தோழர்.S.மணி, பண்ருட்டி கிளைச்செயலர் தோழர் S.பாஸ்கரன், விழுப்புரம் கிளைப்பொருளர் தோழர்.மகாலிங்கம், கடலூர் தோழர்கள். P.ஜெயராஜ், V.முத்துவேலு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். அரகண்டநல்லூர் கிளைத் தோழர்கள் தங்களது கிளையிலுள்ள பிரச்சனைகளை விரிவாக எடுத்துரைத்தனர்முக்கிய நிகழ்வாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் விழுப்புரம் மாவட்டசெயலர் தோழர்.A.V.சரவணன் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு நமக்கு பெருமை சேர்த்தார். அரசியலுக்கும், நமது சங்கத்திற்கும், தனக்கும் உள்ள நெருக்கத்தையும் உள்ள உறவையும் விளக்கமாக எடுத்துக்கூறி,புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு தனது வீரவாழ்த்துக்களை தெரிவித்தார். இறுதியாக மாநில உதவிசெயலர் தோழர்.K.நடராஜன் சிறப்புரையாற்றினார். பின்னர் மாவட்டசெயலர் தோழர். இரா.ஸ்ரீதர் நிறைவுரையாற்றி நன்றி தெரிவிக்க கூட்டம் இனிதே நிறைவுற்றது. இக்கூட்டத்தில் மாவட்டத்தின் பல கிளைகளிலிருந்தும் கிளைச்சங்க நிர்வாகிகளும்,கிளைத்தோழர்களும் திரளாக கலந்து கொண்டனர். கூட்டத்தை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்த கிளைத் தோழர்களை மனதார மாவட்டசங்கம் பாராட்டுகிறது. 







ஆர்.கே.லக்‌ஷ்மண் மறைவு-அஞ்சலி




பிரபல கார்ட்டூனிஸ்ட் ராசிபுரம் கிருஷ்ணசாமி அய்யர் லக்‌ஷ்மண் (94) உடல்நலக் குறைவு காரணமாக புனே நகரில் நேற்று காலமானார்.

தமிழகத்தைச் சேர்ந்த இவர் சிறுநீரக தொற்று காரணமாக புனேவில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 17-ம் தேதி அனுமதிக்கப்பட்டார். உயிர் காக்கும் உபகரணங்களுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவரது உடல்நிலை சிறிது தேறிவந்த நிலையில் கடந்த 24 ம் தேதி மீண்டும் மோசமானது. அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டபோதும் நேற்று மாலை அவரது உயிர் பிரிந்தது.

மைசூர் முதல் புனே வரை

ஆர்.கே.லக்‌ஷ்மண் தந்தை கிருஷ்ணசாமி அய்யர் சென் னையில் உள்ள பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். பின்னர் அவர் மைசூர் மகராஜா காலேஜ் ஹை ஸ்கூலுக்கு பணிமாற்றம் செய்யப்பட்டதால் குடும்பம் அங்கு குடியேறியது. கடந்த 1921 அக்டோபர் 24-ம் தேதி மைசூரில் லக்‌ஷ்மண் பிறந்தார்.

மறைந்த பிரபல எழுத்தாளர் ஆர்.கே.நாராயண் உட்பட அவருக்கு 5 சகோதரர்கள், 5 சகோதரிகள். இவரது மனைவி கமலா, மகன் ஸ்ரீநிவாஸ். ஆரம்ப காலத்தில் ‘தி இந்து’வில் வெளியான ஆர்.கே. நாராயணின் கதைகளுக்கு லக்‌ஷ்மண் ஓவியங்களை வரைந்து வந்தார்.

பின்னர் பல்வேறு பத்திரிகைகளில் முதன்மை கார்ட்டூனிஸ்டாக பணியாற்றினார். பணியில் ஒழுக்கத்தை மிகவும் கண்டிப்புடன் பின்பற்றினார்.

காலை 9 மணி முதல் 1 மணி வரை அனைத்து பத்திரிகைகளையும் படிப்பார். பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரை கார்ட்டூன்களை வரைய நேரத்தை ஒதுக்குவார். இரவு 8.30 மணி வரை அலுவலகத்திலேயே தவம் இருப்பார். தனது பணி குறித்து அவர் ஒருமுறை கூறியபோது, கார்ட்டூன் வரைவதை திரைப்படம் எடுப்பதற்கு ஒப்பாகவே கருதுகிறேன். பொருத்தமான செட்டிங், கதாபாத்திரங்கள் தேர்வு, ஸ்கிரிப்ட் என அனைத்து பணிகளும் ஒரு திரைப்பட தயாரிப்புக்கு இணையாகவே உள்ளது. நாளொன்றுக்கு 10 மணி நேரம் உழைத்தால்தான் தரமான கார்ட்டூன்களை அளிக்க முடியும் என்றார்.

அவர் உருவாக்கிய ‘திருவாளர் பொதுஜனம்’ கார்ட்டூன் பத்திரிகை உலகில் அழிக்க முடியாத ராஜ முத்திரையாக பதிந்துவிட்டது.

கடந்த 2003-ம் ஆண்டில் அவருக்கு பக்கவாதம் ஏற்பட்டது. இதில் அவரது இடதுபக்க உடல்பாகங்கள் செயல் இழந்தன.

அதில் இருந்து சிறிது மீண்டு வந்த அவர் மனைவியுடன் புனேவில் குடியேறினார். பக்கவாதத்தால் இடது கை செயல் இழந்தாலும் வலது கையால் கார்ட்டூன்களை தொடர்ந்து வரைந்து வந்தார்.

சுமார் 60 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட அவரின் பத்திரிகை பணியைப் பாராட்டி மகாசேசே விருது, பத்ம பூஷண், பத்ம விபூஷண் உள்பட பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
நன்றி: தி ஹிந்து தமிழ் 


Monday, January 26, 2015



குடியரசு தின வாழ்த்துக்கள்!!

1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் நாள் இந்தியா விடுதலைப் பெற்றது. இந்திய விடுதலைக்குப் பிறகு, மக்களாட்சி மட்டுமே ஒரு நாட்டின் சிறப்பான வளர்ச்சிக்கு அடையலாம் எனக் கருதி, டாக்டர் பி. ஆர். அம்பேத்கர் தலைமையில் இந்திய அரசியல் சட்டம் நிறைவேற்றப்பட்டு, 1950 ஜனவரி 26 முதல் குடியரசு தினமாகக் கொண்டாடப்படுகிறது. மேலும், அத்திருநாளில் தமது தாய் நாட்டினை அந்நியர்களின் பிடியிலிருந்து காப்பாற்றி, பாரத மண்ணில் ஒவ்வொரு மனிதனும் சுதந்திரக் காற்றை சுவாசிக்க பாடுபட்ட தியாகிகளை நினைவுக்கூரும் வகையில் விடுமுறை அளிக்கப்பட்டு, நாடெங்கும் அனைத்து பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், அலுவகங்களிலும் தேசிய கீதம் பாடி கொடியேற்றி, இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டு வருகிறது. அத்தகைய சிறப்புமிக்க திருநாளான குடியரசு தினம் என்றால் என்ன? அதை கொண்டாடப்படுவதற்கான முதற்காரணம் என்ன? என்பதை விரிவாகக் காண்போம்.
ஆங்கிலேயரின் ஆட்சி
ஐரோப்பாவைச் சேர்ந்த போர்ச்சுகீசிய மாலுமியான வாஸ்கோடகாமா என்பவர், கடல்வழிப் பயணமாக 1498 மே மாதம் 17 ஆம் நாள் இந்தியாவைக் கண்டறிந்தார். அதன் பிறகு, இந்தியாவின் வளமையைக் கண்ட ஐரோப்பியர்கள் வணிகம் செய்யும் நோக்கத்துடன், இந்தியாவில் குடியேறினர். அதன் அடிப்படையில் போர்ச்சுகீசியர்கள், முதன் முதலாக இந்தியாவின் கடலோரப் பகுதிகளான கோவா, டியூ, டாமன் மற்றும் பாம்பே போன்ற இடங்களில் தங்களது வாணிக முகாம்களை அமைத்தனர். இவர்களைத் தொடர்ந்து, டச்சுக்காரர்கள், பிரிட்டிஷ்காரர்கள், பிரெஞ்சுகாரர்களும் என இந்தியாவில் வணிக முகாம்களை ஏற்படுத்திக்கொண்டு வாணிபத்தில் ஈடுபட்டனர். இந்தியாவில் குடியேறிய அனைத்து ஐரோப்பியர்களும், வணிகத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு செயல்பட்டாலும், பிரிட்டிஷ்காரர்கள் மட்டும் ஆங்கிலக் கிழக்கிந்திய கம்பெனி என்ற ஒன்றை நிறுவி நிரந்தரமாக வணிகத்தில் ஈடுபட்டனர். நாளடைவில் இந்திய மன்னர்களிடம் இருந்த ஒற்றுமையின்மையை நன்றாகப் பயன்படுத்தி, படிப்படியாக தங்களுடைய ஆதிக்கத்தை விரிவுபடுத்தி, இந்தியாவை முழுமையாகத் தன்னுடைய ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவந்தார்கள். குறுகிய காலத்திற்குள் இந்தியாவைத் தன்னுடைய ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவந்த பிரிட்டிஷ்காரர்கள், இந்திய வளத்தை சுரண்டியது மட்டுமல்லாமல், மக்களை அடிமையாக்கி கொடுங்கோல் ஆட்சி புரியத் தொடங்கினார்கள்.
இந்தியா சுதந்திரம் அடைதல்
ஆங்கிலேயர்களின் அடக்குமுறையைக் கண்டு வெகுண்ட மக்கள் நாளுக்கு நாள் போராட்டங்கள், கழகங்கள், புரட்சிகள் எனத் தொடங்கி, பிரிட்டிஷ்காரர்களை இந்தியாவை விட்டே விரட்ட எண்ணினர். அதன் அடிப்படையில் 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், பிரித்தானிய இந்தியாவில் தேசியவாத உணர்வுகள், காட்டுத் தீ போல் இந்திய மக்களிடையே பரவத்தொடங்கியது. இந்திய தேசிய காங்கிரஸ் கட்சிஎன்னும் அமைப்பில் ஒன்றிணைந்த இந்திய மக்கள், ‘மின்டோ-மார்லி சீர்திருத்தம்’, ‘மாண்டேகு செமஸ் போர்டு சீர்திருத்தம்’, ‘காங்கிரஸ் ஒத்துழையாமை இயக்கம்’, ‘சட்ட மறுப்பு இயக்கம்’, ‘சைமன் கமிஷனுக்கு எதிர்ப்பு’, ‘வெள்ளையனே வெளியேறு இயக்கம்’, ‘உப்பு சத்தியாகிரகம்எனப் பல போராட்டங்களை ஆங்கில ஆட்சிக்கு எதிராக அரங்கேற்றினர். இறுதியில், 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் நாள் விடுதலை இந்தியா என்ற புதிய பாரதம் உதயமானது.
இந்தியக் குடியரசு தினம் கொண்டாடப்படுவதற்கான காரணம்
1929 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் லாகூரில் கூடிய அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டில், அனைத்துத் தலைவர்களாலும் பூரண சுயராஜ்யம்” (முழுமையான சுதந்திரம் என்பது பொருள்) என்பதே நமது நாட்டின் உடனடியான லட்சியம், என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் பிறகு, காந்தியால் இந்தியத் தன்னாட்சிக்கான சாற்றல் உருவாக்கப்பட்டது. அதன் அடிப்படையில் 1930 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் நாள் முதற்கட்டமாக சுதந்திர நாளாகக்கொண்டாடப்பட வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டது.
இந்தியக் குடியரசு தினம்
1946 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 9 ஆம் நாள் காங்கிரஸ் கட்சியால் இந்திய அரசியல் நிர்ணய சபை கூட்டப்பட்டு, அதன் தற்காலிகத் தலைவராக சச்சிதானந்த சின்கா என்பவரை நியமித்தது. ஆகஸ்ட் 15 1947 இந்திய விடுதலைக்குப் பிறகு,  இந்திய அரசியல் நிர்ணய சபைத் தலைவராக டாக்டர் ராஜேந்திரப் பிரசாத் நியமிக்கப்பட்டார். அவரே விடுதலை இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவராகவும் பொறுப்பேற்றார். அதன் பிறகு, இந்திய அரசியலமைப்பு வரைவுக்குழு அமைக்கப்பட்டு, டாக்டர் பி. ஆர். அம்பேத்கர் தலைமையில் இந்திய அரசியல் அமைப்பு சாசன் எழுதப்பட்டது. முகவுரை, விதிகள், அட்டவணைகள், பிற்சேர்க்கை, திருத்த மசோதாக்கள் போன்ற சிறப்பு அம்சங்களைக் கொண்டு நீண்ட ஆவணமாக எழுதப்பட்ட இந்த சாசனம், இந்திய அரசியல் நிர்ணய சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, மக்களாட்சியைக் குறிக்கோளாகக் கொண்டு நிறைவேற்றப்பட்டதால், 1930 ஜனவரி 26 ஆம் நாளை நினைவுகூரும் வகையில் 1950 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் ஜனவரி 26 ஆம் நாளை இந்திய தேசிய குடியரசு தினமாக நடைமுறைப்படுத்தப்பட்டது.
குடியரசு என்பதன் பொருள்
குடியரசு என்பதன் பொருள் மக்களாட்சிஆகும். அதாவது, தேர்தல் மூலம் மக்கள் விரும்பிய ஆட்சியாளர்களைத் தேர்தேடுத்துகொள்ளும் முறைக்கு குடியாட்சி எனப்படுகிறது. மக்களுக்காக, மக்களுடைய மக்கள் அரசுஎன மிகச்சரியாக குடியரசு என்ற வார்த்தைக்கு இலக்கணம் வகுத்துத் தந்தவர், அமெரிக்க ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன். அத்தகைய மக்களுக்கான அரசை இந்தியாவில் ஏற்படுத்தினால்தான், இந்தியா முழு சுதந்திரம் பெற்ற நாடாக ஏற்றுக்கொள்ளப்படும் எனக் கருதி உருவாக்கப்பட்டது தான் இந்திய அரசியல் அமைப்புச் சட்டம்.
குடியரசு தினக் கொண்டாட்டம்
இந்திய விடுதலைக்குப் பிறகு 1950 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் ஜனவரி 26 ஆம் நாளை இந்திய தேசிய குடியரசு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்கள், இந்திய  மூவண்ணக் கொடியை ஏற்றி, இந்த குடியரசுதினக் கொண்டாட்டத்தை ஆரம்பித்து வைத்தார். அன்று முதல் ஒவ்வொரு வருடமும் ஜனவரி 26 ஆம் நாள் தம்முடைய தாய் திருநாட்டை காக்க தமது இன்னுயிரையும் நீத்த தியாகிகளை நினைவுகூரும் வகையில் விடுமுறை அளிக்கப்பட்டு, நாடெங்கும் அனைத்து பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், அலுவகங்களிலும் தேசிய கீதம் பாடி கொடியேற்றி, இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல், ஆண்டுதோறும் குடியரசு தினத்தன்று சிறந்த சேவை புரிந்தோருக்கும், வீரதீர சாகசம் புரிந்தவர்களுக்கும் விருதுகள், பாராட்டுகள், பதக்கங்கள் வழங்கி கௌரவிக்கப்படுகிறது. சுதந்திரம் பெற்ற பிறகு சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் என்ற சிறப்பு பெற்ற ஜவர்ஹலால் நேரு அவர்களின் முன்னிலையில் முதல் குடியரசு தின அணிவகுப்பு நடைபெற்றது. மேலும், அன்றைய நாள் புது தில்லியில் குடியரசுத்தலைவர் முன்னிலையில் முப்படைகளின் அணிவகுப்பும், அதைத் தொடர்ந்து, ஒவ்வொரு மாநிலங்களின் சார்பிலும் அவர்களின் சாதனை அலங்கார ஊர்த்தி அணிவகுப்பு நடைபெறும்.
இன்றைய பொழுதில் இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு, என்பதில் பெருமைக் கொள்கிறோம் என்றால் அதன் பின்னணியில் லட்சக்கணக்கான போராளிகளின் குருதியும், ஆயிரக்கணக்கான தேசத் தலைவர்களின் தியாகமும் மறைந்திருக்கிறது என்றால் யாராலும் மறுக்க இயலாது. சுமார் 100 கோடிக்கும் மேல் மக்கள் தொகையைக் கொண்ட நாடாக இருந்தாலும், சாதி, மதம், மொழி எனப் பல வேறுபாடுகள் இருந்தாலும் அனைவரும் இந்தியர் என்பதில் பெருமைகொள்ளுவோம்.
வாழ்க பாரதம்!!!! ஜெய்ஹிந்த்!!!

நன்றி- மதுரை மாவட்ட வலைப்பதிவு


Sunday, January 25, 2015

செஞ்சி SAVE BSNL 
கையெழுத்து இயக்கம் 24-01-2015

SAVE BSNL  கையெழுத்து இயக்கம்
 BSNLEU மாவட்ட துணைத்தலைவர் தோழர்.N.சுந்தரம் தலைமையில் 
செஞ்சி தொலைபேசி நிலையவளாகத்தில் நடைபெற்றது.
NFTE உதவி கிளைச்செயலர்  தோழர். Y.ஹாரூன்பாஷா வரவேற்புரையில்
BSNLEU மாவட்ட செயலர் தோழர்.K.T.சம்பந்தம் துவக்க உரையாற்ற,
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க செஞ்சி வட்டத்தலைவர் திரு.செல்வக்குமார்,
தமிழ்நாடு அரசு கிராம நிர்வாக அலுவலகர்கள் முன்னேற்றசங்கம் திரு.பிரபுசங்கர்,
தமிழ்நாடு அரசு வருவாய்த்துறை கிராம ஊழியர் சங்கம்
 செஞ்சி வட்டத்தலைவர் திரு.செல்லமுத்து,
தமிழ்நாடு அரசு ஓய்வு பெற்றோர் நலச்சங்க தலைவர் திரு.இளங்கோவன்,            தமிழ்நாடு அரசு நுகர்பொருள் விநியோகஸ்தர் சங்கம்
 மாவட்ட தலைவர் திரு. செல்வராஜ்,
வர்த்தகர் சங்க வட்டத்தலைவர் திரு.வெங்கிட்டு,
மனிதநேய மக்கள் கட்சி செஞ்சி ஒன்றிய பொறுப்பாளர்
திரு.சையத் உஸ்மான்,
இந்தியகம்யூனிஸ்ட் கட்சி விழுப்புரம் மாவட்ட துணைச்செயலர்
தோழர் A.கோவிந்தராஜ்,
இந்தியகம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கட்சி தோழர் P.கோவிந்தராஜ்
விடுதலைசிறுத்தைகள் கட்சி விழுப்புரம் மாவட்டச்செயலர்
வழக்கறிஞர் திரு. A.வெற்றிச்செல்வன்,
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம்
விழுப்புரம் மாவட்டச்செயலர் திரு.A.K.மணி
ஆகியோர் கலந்துகொண்டு கையெழுத்து இட்டு இயக்கத்தை தொடங்கிவைத்து தங்கள் கருத்துகளை எடுத்துரைத்தனர்.
மேலும் திராவிட முன்னேற்ற கழக செஞ்சி திரு,துரை திருநாவுக்கரசு, திராவிடர் கழக மகளிரணி தோழியர்.கீதா,
இந்தியகம்யூனிஸ்ட் கட்சி நகர செயலாளர் தோழர். செல்வராஜ்,
 இந்தியகம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கட்சி தோழர்.சுப்ரமணி ஆகியோரும் கலந்துகொண்டு கையெழுத்திட்டனர்.
AIBSNLEA மாநில துணைத்தலைவர் தோழர்.நடராஜன்,
நமது மாவட்ட தலைவர் தோழர்.செல்வம்
ஆகியோர் நமது பகுதி கருத்துகளை எடுத்துரைத்தனர்.
நிறைவாக நமது மாவட்டசெயலர் தோழர்.இரா.ஸ்ரீதர் பேசினார்.
BSNLEU மாவட்டஉதவிசெயலர் தோழர். A.கருணைவேல் நன்றிவுரையாற்றினார்.
இயக்கத்தை சிறப்பாக ஏற்பாடுகள் செய்த செஞ்சி பகுதி ஒருங்கிணைப்பாளர் தோழர்.சுந்தரம் அவர்களுக்கும், நமது செஞ்சி கிளைசெயலக தோழர்களுக்கும் மாவட்டசங்கத்தின் நன்றிகளை உரித்தாக்குகிறோம்.