.

Friday, August 7, 2015

பணி ஓய்வு பாராட்டு விழா- சிதம்பரம் 

சிதம்பரம் கிளையின் சார்பில் ஓய்வு பெற்றத் தோழர்கள் லட்சுமிநாராயணன், பாலன்,பழனிச்சாமி. தோழியர் ராதாருக்மணி ஆகியோர்களுக்கு பணி ஓய்வு பாராட்டு கூட்டம் கிளைத்தோழர் K.நாவு அவர்கள் தலைமையில் 7-8-2015 மாலை சிதம்பரம் வண்டிகேட் தொலைபேசி நிலையத்தில் நடைபெற்றது தோழர்.ரவிச்சந்திரன்-TTA வரவேற்புரையாற்ற, மாநிலத் துணை தலைவர் தோழர்.V.லோகநாதன் துவக்கவுரையாற்றினார்.
அண்மையில் மறைந்த தோழர் கண்ணையன் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. அஞ்சலியுரையை தோழர். ரவிச்சந்திரன் மாவட்ட உதவி செயலர், வாசித்தார். பின் 
தோழர். R.செல்வம் மாநிலபொதுச்செயலர்-TMTCLU,
தோழர்.G.ரங்கராஜ் மாவட்ட செயலர்-TMTCLU,
தோழர்.கிருஷ்ணகுமார், தோழர்.D.குழந்தைநாதன்
மாவட்ட உதவிசெயலர்கள்-NFTE,
ஓய்வு பெற்ற  மூத்த தோழர் சுதாகர் ,  தோழர்.சிதம்பரநாதன் கிளைச்செயலர் -BSNLEU, தோழர்.மனோகரன்-மாவட்ட செயலர் PEWA, தோழர்.நடராஜன் SNEA, தோழர்.விஸ்வலிங்கம்-AIBSLEA, தோழர்.V.இளங்கோவன் - உதவிச்செயலர் அரகண்டநல்லூர், தோழர்.கருணாநிதி-TTA,
தோழர்.இரா.ஸ்ரீதர் மாவட்டசெயலர்
ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
நமது மாநிலச்செயலர் தோழர்.பட்டாபி தனது உரையில் BSNL வசம் உள்ள ஏறத்தாழ ரூ.20000/= கோடி மதிப்பிலான 65000 செல் கோபுரங்களை தனி அமைப்பாக மாற்றுவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் கொடுத்துள்ளதாக
செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த பணியைச் செய்து முடிக்க தனி அமைச்சர்கள் குழு அமைக்கப்படும்.அந்தக்குழு தனி நிறுவனம் அமைப்பதற்கான நடைமுறைகளை ஆராய்ந்து மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்கு அனுப்பும். செல் கோபுரங்களை தனியாக பிரிக்கக்கூடாது என்பது

ஊழியர் கூட்டமைப்பின் கோரிக்கையாகும். இதனால் BSNL மேலும் நலிவடையும் ஆனாலும் வழக்கம் போலவே நிர்வாகமும் அரசும் ஊழியர் தரப்பை ஊதாசீனப்படுத்தி விட்டு தாங்கள் நினைப்பதையே செயல்படுத்தி வருகின்றார்கள். நாம் செலுத்திய 600 கோடி ரூபாய் பணத்தை நமக்கு திருப்பி அளித்து விட்டு நமது 20000 கோடி சொத்தான செல் கோபுரங்களை நம்மிடமிருந்து அரசு அபகரிக்க உள்ளது இதனை பாதுகாக்க நாம் ஒன்றிணைந்து போராட வேண்டியதன் அவசியத்தையும், செப்டம்பர் 2 வேலை நிறுத்தத்தில் நாம் முழுமையாக கலந்துகொள்வதன் மூலம் நாம் இதுபோன்ற அரசின் செயல்களை முடக்கலாம் என்று தமது சிறப்புரையில் விளக்கினார். பின்னர் நமது சம்மேளனசெயலர் தோழர்.G.ஜெயராமன் சிறப்புரையாற்றினார். தோழர் மாதேஸ்வரன் நன்றியுரையுடன் கூட்டம் இனிதே முடிவுற்றது. மாவட்டம் முழுவதும் இருந்து தோழர்கள் திரளாக கலந்து கொண்டனர். சிதம்பரம் பகுதியில் இருந்து அதிகாரிகள் முதல் தோழர்கள் வரை தமது உறவினர்களுடன் கலந்து கொண்டது சிறப்பாக இருந்தது. மூத்த தோழர் ரங்கநாதன் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பு செய்தார். விழா ஏற்பாடுகள், உணவு உபசரிப்புகள் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கிளை செயலர் தோழர் V.கிருஷ்ணமூர்த்திக்கு வாழ்த்துக்கள்




















No comments:

Post a Comment