.

Friday, February 6, 2015



TTA - இலாக்காத்தேர்வு

TTA புதிய ஆளெடுப்பு விதிகளின்படி 2014ம் ஆண்டிற்கான
TTA  காலியிடங்களுக்கான இலாக்காப் போட்டித்தேர்வு
நடத்துவதற்கான ஒப்புதல் BSNL  நிர்வாகத்தால் வழங்கப்பட்டுள்ளது.
2014ம் ஆண்டிற்கான காலியிடங்களில் 50 சதம்
 இலாக்கா ஊழியர்களால் நிரப்பப்படும்.
ஏற்கனவே இந்த 50 சதத்தில் 40 சத காலியிடங்கள்  போட்டித்தேர்வாலும்
10 சத காலியிடங்கள்  உரிய கல்வித்தகுதி உள்ள ஊழியர்களால் நேரடி நியமனத்தாலும் WALK IN GROUP நிரப்பப்பட்டது. தற்போது இந்த 10 சத ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டுள்ளது.
01/07/2014 என்பது தகுதி தீர்மானிக்கும் தேதியாக இருக்கும்.
நாடு முழுக்க ஒரே தேதியில் தேர்வு நடைபெறும்.
இந்த தேர்வில் வெற்றி பெறும் தோழர்கள் தமிழகம் முழுவதும் பணி செய்யத்தயாராக இருக்க வேண்டும். ஏனெனில் TTA பதவி (CIRCLE CADRE ) மாநில மட்டப்பதவியாக மாற்றப்பட்டுள்ளது. ஆனால் இதே சம்பளம்தான் கிடைக்கும். இதே பெயர்தான் இருக்கும். பணி ஓய்வு,இறப்பு போன்றவற்றால் உருவாகும் TTA காலியிடங்களும் வருங்காலத்தில் மாநில மட்டப்பதவியாக மாற்றப்படும்.
தேர்வில் வழக்கம் போல் எதிர்மறை மதிப்பெண்கள் உண்டு.
குறைந்த பட்ச கல்வித்தகுதி +2 ஆகும்.
TTA  புதிய ஆளெடுப்பு விதிகளில் சங்கங்கள் கோரிய மாற்றங்கள்  எதனையும் நிர்வாகம் காதில் போட்டுக்கொள்ளவில்லை. குறைந்த பட்சம் தேர்வாவது நடக்கின்றதே என தோழர்கள் சமாதானம் அடைய வேண்டும். தகுதியுள்ள தோழர்கள் இன்றிலிருந்தே தேர்வுக்கும்,

மாற்றலுக்கும் மனதளவில் தயாராக வேண்டும்.

No comments:

Post a Comment