.

Monday, April 28, 2014

டெலிகாம் மெக்கானிக் சுழற்சி மாற்றல்

டெலிகாம் மெக்கானிக் சுழற்சி மாற்றலுக்கான உத்திரவு வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 2012-ல் சுழற்சி மாற்றலில் வெளியூர் சென்றவர்கள் தங்களின் மாற்றல் விண்ணப்பங்கள்  03-05-2014 க்குள் சமர்ப்பித்திட வேண்டும். மாவட்ட சங்கத்திற்கு நகலையும் அனுப்பிட வேண்டும்.  LONG STAY PARTICULARS வெளியிடப்பட்டுள்ளது. அதை சரிபார்த்து ஏதேனும் மாற்றம் இருந்தால் மாவட்ட செயலரை உடனே அணுகும்படி கேட்டுக்கொள்கிறோம். 

இரங்கல்

நம்முடன் பணியாற்றும் மோட்டர் டிரைவர்  திரு S முகமது அலி அவர்களின் மனைவி  நேற்று (27-04-2014)    காலமானார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். பிரிவால் துயருறும் அவரது குடும்பத்தாருக்கு மாவட்டச் சங்கம் தனது ஆழ்ந்த இரங்கலை உரித்தாக்குகிறது.

இறுதி நிகழ்ச்சிகள் விழுப்புரத்தில்   இன்று (28-04-2014)  நடைபெறும் .

Sunday, April 27, 2014

பாராட்டுகிறோம்

நமது கடலூர் மாவட்டத்தில் 2013-2014ம் நிதி ஆண்டில் 
உதான் பிரிவில்  திறம் பட பணி புரிந்து சிறந்த SALES ASSOCIATE 
 என்று CGM  கையெழுத்திட்ட பாராட்டு பெறும் 
 தோழர் K ராகவன்-ஐ 
நமது NFTE-BSNL மாவட்ட சங்கத்தின் சார்பாக 
மனதார பாராட்டுகிறோம்... 

தோழரின்  பணி மேலும் சிறக்க தோழமை வாழ்த்துக்கள்... 

Monday, April 21, 2014

அமோக வெற்றி!

இது குழம்பிய குட்டை அல்ல -
யாரும் வந்து இங்கு  மீன் பிடிக்க!

பொங்கிப் பெருகிய பேராறு என 
சங்கங்கள் பெருமைப்பட 
கடல்(ஊர்) வந்து வாக்களித்து 
அமோக வெற்றியை குவித்த 
தோழர்களுக்கு நன்றி!

NFTE -BSNLEU -SNEA -AIBSNLEA கூட்டணியின் 
9 RGB தோழர்களும் 
அமோக வெற்றி!

நன்றி தோழர்களே!



























Thursday, April 17, 2014

இந்த உலகில் எல்லோருக்கும் இடம் இருக்கிறது


மன்னித்துக்கொள்ளுங்கள், நான் ஒரு பேரரசனாக ஆக விரும்பவில்லை. அது என்னுடைய வேலையும் அல்ல. நான் யாரையும் ஆளவோ வெற்றிகொள்ளவோ விரும்பவில்லை. முடிந்தால், அனைவருக்கும் உதவி செய்யவே விரும்புகிறேன்.

யூதர்கள், யூதரல்லாதவர்கள், கருப்பினத்தவர், வெள்ளையினத்தவர் என்று அனைவருக்கும் உதவவே விரும்புகிறேன். நாமெல்லோரும் ஒருவொருக்கொருவர் உதவிசெய்துகொள்ளத்தான் வேண்டும். மனிதர்கள் அப்படித்தான். நாம் ஒவ்வொருவரும் அடுத்தவர்களின் மகிழ்ச்சியை ஆதாரமாகக் கொண்டுதான் வாழ வேண்டும், அடுத்தவர்களின் துன்பத்தை ஆதாரமாகக் கொண்டல்ல. நாமெல்லோரும் ஒருவருக்கொருவர் வெறுக்கவும் துவேஷம் கொள்ளவும் வேண்டியதில்லை.

இந்த உலகத்தில் ஒவ்வொருவருக்கும் இடம் இருக்கிறது. நம்முடைய நல்ல பூமி வளம் மிக்கது, எல்லோருடைய தேவைகளையும் நிறைவேற்றக் கூடியது.

தொலைத்துவிட்ட பாதை

வாழ்க்கைப் பாதை என்பது சுதந்திரமானதாகவும் அழகானதாகவும் இருக்க முடியும். ஆனால், அந்தப் பாதையை நாம் தொலைத்துவிட்டோம். மனிதர்களின் ஆன்மாக்களில் பேராசை விஷத்தைக் கலந்துவிட்டது. அந்தப் பேராசை, வெறுப்பால் இந்த உலகத்துக்கு முட்டுக்கட்டை போட்டுவிட்டது, துன்பத்திலும் துயரத்திலும் நம்மைத் தள்ளிவிட்டது. வேகத்தை அதிகப்படுத்தியிருக்கிறோம்.

ஆனால், நாம் நமக்குள்ளே முடங்கிப்போயிருக்கிறோம். ஏராளமாக உற்பத்தி செய்யும் இயந்திரங்கள் நம்மிடம் இருந்தும் என்ன பயன், நாம் வறுமையில்தான் உழன்றுகொண்டிருக்கிறோம். நமது அறிவு யார் மீதும் நம்பிக்கையற்றவர்களாக நம்மை ஆக்கிவிட்டது. நமது புத்திசாலித்தனம் கடின மனம் கொண்டவர்களாகவும் இரக்கமற்றவர்களாகவும் நம்மை ஆக்கிவிட்டது. மிதமிஞ்சி சிந்திக்கிறோம், மிகமிகக் குறைவாக அக்கறைகொள்கிறோம். இயந்திரங்களை விட நமக்கு அதிகம் தேவை மனிதமே.

புத்திசாலித்தனத்தைவிட நமக்கு அதிகம் தேவை இரக்கவுணர்வும் கண்ணியமுமே. இந்தப் பண்புகள் இல்லையென்றால், வாழ்க்கை கொடூரமானதாக ஆகிவிடும். அப்புறம் நமது கதை அவ்வளவுதான்.

கண்டுபிடிப்புகளின் அடிப்படை

விமானமும் வானொலியும் நம் அனைவரையும் மிகவும் நெருங்கி வரச் செய்திருக்கின்றன. மனிதர்களின் நற்குணத்தையும், உலகளாவிய சகோதரத்துவத்தையும், அனைவரது ஒற்றுமையையும் வலியுறுத்துவதுதான் இந்தக் கண்டுபிடிப்புகளின் அடிப்படை இயல்பே.

இந்த உலகில் உள்ள கோடிக் கணக்கானவர்களை என் குரல் இந்தத் தருணத்தில் சென்றடைகிறது. நம்பிக்கையை இழந்த ஆண்கள், பெண்கள், சின்னஞ்சிறு குழந்தைகள் என்று கோடிக் கணக்கான மக்களைச் சென்றடைகிறது. அதாவது, அப்பாவி மக்களை சக மனிதர்களே கொடுமைப்படுத்துவதும் சிறைப்படுத்துவதுமான ஒரு சித்தாந்தத்தின் பலிகடாக்களை எனது குரல் இந்தத் தருணத்தில் சென்றடைகிறது.

சுதந்திரம் ஒருபோதும் அழியாது

நான் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருப்பவர்களே, உங்களுக்கு நான் ஒன்றைச் சொல்லுகிறேன்- நம்பிக்கை இழக்காதீர்கள். நம்மை ஆட்கொண்ட துன்பம் என்பது வேறொன்றுமில்லை, பேராசையின் விளைவுதான் அது. மனித முன்னேற்றத்தைக் கண்டு அஞ்சும் மனிதர்களின் கசப்புணர்வுதான் அது. மனிதர்களின் வெறுப்பு கடந்துபோகும், சர்வாதிகாரிகள் இறந்துவிடுவார்கள், மக்களிடமிருந்து அவர்கள் எடுத்துக்கொண்ட அதிகாரம் மக்களிடமே திரும்பும். மனிதர்கள் தங்கள் உயிரைத் தியாகம் செய்வது நீடிக்கும்வரை, சுதந்திரம் என்பது ஒருபோதும் அழியாது.

நீங்கள் இயந்திரங்கள் அல்ல

போர்வீரர்களே, கொடூரர்களிடம் உங்களை ஒப்படைக் காதீர்கள். அவர்கள் உங்களை வெறுப்பவர்கள், உங்களை அடிமைப்படுத்துபவர்கள், உங்கள் வாழ்க்கையைக் கடுமையாகக் கட்டுப்படுத்தக்கூடியவர்கள், நீங்கள் என்ன செய்ய வேண்டும், என்ன நினைக்க வேண்டும், எதை உணர வேண்டும் என்றெல்லாம் சொல்பவர்கள்! உங்களைப் பழக்குவார்கள், உங்களைக் குறைவாக உண்ண வைப்பார்கள், கால்நடைகளைப் போலவே உங்களை நடத்துவார்கள்.

உங்களைப் பீரங்கிக் குண்டுகளுக்கு இரையாக்குவார்கள். மனித இயல்பற்ற அவர்களுக்கு அடிபணிந்துவிடாதீர்கள். இயந்திர மனங்களையும் இயந்திர இதயங்களையும் கொண்ட இயந்திர மனிதர்கள் தான் அவர்கள். நீங்களெல்லாம் இயந்திரங்கள் அல்ல, நீங்களெல்லாம் கால்நடைகள் அல்ல, நீங்கள் மனிதர் கள்! மனிதம் மீதான அன்பு உங்கள் இதயத்தில் இருக்கிறது. நீங்கள் யாரையும் வெறுப்பதில்லை. நேசிக்கப்படாதவர்கள்தான் வெறுப்பார்கள் - நேசிக்கப் படாத, மனித இயல்பற்ற மனிதர்கள்தான் அவர்கள்! போர்வீரர்களே, அடிமைத்தனத்துக்காகப் போரிடாதீர்கள்! சுதந்திரத்துக்காகப் போராடுங்கள்!

கடவுளின் சாம்ராஜ்யம்

17-வது அதிகாரத்திலே புனித லூக்கா சொல்லியிருக்கிறார்: “கடவுளின் சாம்ராஜ்யம் மனிதனுக்குள்தான் இருக்கிறது.” ஒரு மனிதனுக்குள்ளோ, ஒரு குழுவுக் குள்ளோ என்பதல்ல இதன் அர்த்தம். எல்லா மனிதருக் குள்ளும் என்பதுதான் இதன் அர்த்தம்! உங்களுக் குள் இருக்கிறது என்பதுதான் அர்த்தம்! மக்களே, உங்களிடம்தான் இருக்கிறது சக்தி - இயந்திரங்களை உருவாக்குவதற்கான சக்தி.

மகிழ்ச்சியை உருவாக்கு வதற்கான சக்தி! இந்த வாழ்க்கையைச் சுதந்திரமான தாகவும் அழகானதாகவும் ஆக்குவதற்கான சக்தியும், இந்த வாழ்க்கையை அற்புதமான சாகசமாக்குவதற்கான சக்தியும் மக்களே உங்களிடம்தான் இருக்கின்றன.

புதியதோர் உலகைப் படைப்போம்!

அப்படியென்றால், ஜனநாயகத்தின் பெயரால், நாமெல்லோரும் அந்த சக்தியைப் பயன்படுத்துவோம், நாமெல்லோரும் ஒன்றுசேர்வோம். புதியதோர் உலகைப் படைப்பதற்காக நாமெல்லோரும் போராடுவோம். மனிதர்களுக்கு வேலை பார்ப்பதற்கான வாய்ப்பையும், இளைஞர்களுக்கு எதிர்காலத்தையும் முதியவர்களுக்கு அரவணைப்பையும் தரக்கூடிய கண்ணியமான அந்தப் புதிய உலகத்துக்காகப் போராடுவோம்.

இதையெல்லாம் வாக்குறுதிகளாகக் கொடுத்துதான் கொடூ ரர்கள் அதிகாரத்துக்கு வந்தார்கள். அவர்கள் சொன்ன தெல்லாம் பொய்! அவர்கள் தங்களுடைய வாக்குறு திகளை நிறைவேற்றவில்லை, அவர்களால் ஒருபோதும் நிறைவேற்ற முடியாது!

சர்வாதிகாரிகள் தங்களை விடுவித்துக்கொள்வார்கள். ஆனால், மக்களை அடிமைப்படுத்திவிடுவார்கள்! அந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற நாம் ஒருங்கிணைந்து போராட இதுவே தருணம்! நாடுகளுக்கிடையிலான பாகுபாடுகளைத் தகர்க்கவும், பேராசையையும் வெறுப் பையும் சகிப்பின்மையையும் குழிதோண்டிப் புதைக்கவும் அனைவரும் ஒன்றுசேர்ந்து போராடுவோம், புதிய உலகைப் படைக்க.

அறிவியலும் முன்னேற்றமும் மனிதர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துவதையே நோக்க மாகக்கொண்டிருக்கும் அந்த உலகத்துக்காக, பகுத்தறிவின் உலகத்துக்காக அனைவரும் போராடுவோம். வீரர்களே, ஜனநாயகத்தின் பேரால், அனைவரும் ஒன்றுசேர்வோம்!

(ஹிட்லரைப் பகடிசெய்து சார்லி சாப்ளின் 1940-ம் ஆண்டு உருவாக்கிய ‘த கிரேட் டிக்டேட்டர்' திரைப்படத்தின் இறுதியில் சாப்ளின் ஆற்றும் உரை.)


நன்றி :தமிழ் தி இந்து  

CHILD CARE LEAVE

மத்திய அரசில் பணி புரியும் பெண்கள் 730 நாள் குழந்தை பராமரிப்பு விடுப்பையும் ஒட்டு மொத்தமாக எடுக்கலாம் என உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியுள்ளது. விடுப்பு விதிகளின்படி 2 வருட விடுப்பை ஒட்டு மொத்தமாக எடுக்க இயலாது என்ற கல்கத்தா உயர்நீதிமன்ற தீர்ப்பு இதன் மூலம் திருத்தப்பட்டுள்ளது.

Tuesday, April 15, 2014

RGB தேர்தல் சிறப்பு கூட்டம் 
கடலூர்
GM அலுவலகம் 
16-04-2014 மதியம் 1 மணி 

பங்கேற்பு :
தோழர்  C பாண்டுரங்கன் மாவட்ட செயலர் SNEA 
தோழர் P வெங்கடேசன் மாவட்ட செயலர் BSNLEA 
தோழர் இரா ஸ்ரீதர் மாவட்ட செயலர் NFTE 
தோழர் K.T.சம்பந்தம் மாவட்ட செயலர் BSNLEU 

அனைத்து தோழர்களும்  தவறாமல் கலந்து கொள்ள வேண்டுகிறோம்  

Tuesday, April 1, 2014

TMTCLU மாநில சிறப்பு மாநாடு காரைக்குடி 30-03-2014

NFTE-BSNL
TMTCLU
தமிழ் மாநில தொலைதொடர்பு ஒப்பந்த தொழிலாளர்  சங்கம் 
மாநில சிறப்பு மாநாடு காரைக்குடி 

           "எல்லோரும் எல்லாமும்  பெற வேண்டும்" என்று பாடிய கவியரசு கண்ணதாசன் மணிமண்டபத்தில்(காரைக்குடி) 300க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்களும் 100க்கும் மேற்பட்ட நிரந்திர ஊழியர்களும் கலந்து கொண்டு ஒப்பந்த தொழிலாளர் மாநாட்டை சிறப்பித்தனர். தோழர் ஆர் கே தலைமையேற்க, காரைக்குடி TMTCLU  மாவட்ட செயலர் தோழர் P ராமசாமி வரவேற்றிட, தோழர் நாகேஸ்வரன் அஞ்சலியுரையாற்றிட , தோழர் R பட்டாபிராமன் பொருள் பொதிந்த துவக்கவுரை நிகழ்த்தினார்.மாநில பொதுச்செயலாளர் S தமிழ்மணி அறிக்கையை சமர்ப்பித்து அறிமுகவுரையாற்றினார்.
            
            AITUC-ன் மாநில பொதுச்செயலாளர் தோழர் T.M. மூர்த்தி அவர்கள் கலந்து கொண்டு பல்வேறு கருத்துக்களை நம்மோடு பகிர்ந்து கொண்டார்.  AITUC -ன் மத்திய செயற்குழு உறுப்பினர் தோழியர் மீனாள் சேதுராமன், AITUC -ன் காரைக்குடி மாவட்ட செயலர் தோழர் ரத்தினம், AITUC -ன் போக்குவரத்து துறை தோழர் மணவழகன் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.
           
              தோழர்கள் சேது,லட்சம், முருகேசன்,முரளி (சென்னை), ராபர்ட் (கோவை), நடராஜன்(தஞ்சை), காமராஜ்(புதுவை), இரா ஸ்ரீதர், லோகநாதன்(கடலூர்), மனோகரன்(திருச்சி) மற்றும் முன்னணி தோழர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.  பல ஒப்பந்த தொழிலாளர்கள் தங்கள் கருத்துகளை பதிவு செய்தது மாநாட்டின் சிறப்பம்சம்.

             தோழர் நல்லுசாமி TM மாவட்ட செயலர் TMTCLU ஈரோடு,தோழர் M S குமார் கடலூர், தோழர் P முருகேசு மன்னார்குடி, தோழர் M இசையரசன் சேலம் ,தோழர் M S  தாளமுருகன் அறந்தாங்கி, தோழர் C வெங்கடேசன் வேலூர், தோழர் S மாடசாமி காரைக்குடி,தோழர் K மணி மதுரை , தோழர் B முத்து வைத்திலிங்கம் கும்பகோணம், தோழர் S ரமேஷ் ஈரோடு, தோழர் கோபால் தஞ்சாவூர் , தோழர் முருகன் தூத்துக்குடி ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள்.

         தோழர் ஆர் கே  தனது நிறைவுரையில் மே 17-ல் தீர்மானம் நிறைவேற்றம் வலியுறுத்தி ஆர்ப்பாட்டமும் அதனை தொடர்ந்து தலைமை பொதுமேலாளர் அலுவலகம் முன் பெருந்திரள் தர்ணா போராட்ட அறைகூவல் விடுத்து எழுச்சியுரையாற்றினார்.

            ஒப்பந்த தொழிலாளர் சங்க இணைய தளம் துவங்கவும் முடிவு செய்யப்பட்டது.

            இறுதியில் விழுப்புரம் தோழர் A சுப்பிரமணி நன்றியுரையாற்ற மாநாடு நிறைவு பெற்றது.


நிர்வாகிகள் பட்டியல் :



தலைவர்                        : தோழர்.ஆர்.கே. சென்னை



துணை தலைவர்கள்   : 1. தோழர் M .மாதவன், TM , அறந்தாங்கி.

                                                   2. தோழர் S .பிரின்ஸ், தஞ்சாவூர்

                                                   3. தோழர் கிருஷ்ணமூர்த்தி, கோவை
                                                   4. தோழர் E .கோபாலகிருஷ்ணன்,CL மதுரை

                                                   5. தோழியர் R .சக்தி, CL , STR - திருச்சி.

பொதுச் செயலாளர்      : தோழர்.R . செல்வம், Sr TOA
                                                                                                                        விழுப்புரம்

இணைச் செயலாளர்கள் : 1. தோழர்.S தமிழ்மணி, கடலூர்.
                                                         2. தோழர் S சிவசங்கரன், தஞ்சாவூர்
                                                         3. தோழர் ஜோசப் TM நாகர்கோயில்

துணைச் செயலாளர்கள் :  1. தோழர்.A மோகன், CL ,   தூத்துக்குடி,



                                                          2.தோழர் M.சரவணன், CL,புதுச்சேரி

                                                                                      3. தோழியர்.A.சகாயராணி,  CL ,திருச்சி
                                                          4. தோழர் B முத்துவைத்திலிங்கம்,CL குடந்தை

                                                          5. தோழர் A சண்முகசுந்தரம், TM ,சேலம்
                                                          6. தோழர் A.சுப்பிரமணியம்,CL விழுப்புரம் 
                                                         

பொருளாளர்                          : தோழர்.M விஜய்ஆரோக்யராஜ்,SrTOA 
                                                        குடந்தை

துணை பொருளாளர்         : தோழர் M சையது முகமது CL , STR திருச்சி
                                                      

அமைப்புச் செயலாளர்கள் : 1. தோழர் நல்லுசாமி, TM ,  ஈரோடு
                                                             2.  தோழர் C வெங்கடேசன், CL வேலூர்
                                                             3.  தோழர் இளங்கோ,  CL தர்மபுரி
                                                             4.  தோழர் R மாரிமுத்து, CL காரைக்குடி
                                                             5.  தோழர் S தாமஸ் எடிசன், CL தஞ்சாவூர்
                                                               

தணிக்கையாளர்                   : தோழர் முனியன், தர்மபுரி.

தீர்மானங்கள் 
1) மத்திய சங்க கோரிக்கை சாசனப்படி குறைந்தபட்ச ஊதியம் ரூ 10000/-, குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ 3000/- பெற்றிட அகில இந்திய இயக்கங்களில் பங்கு பெற்று போராட வேண்டும்.

2)ஒப்பந்த ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய வாரவிடுமுறை வழங்கப்பட வேண்டும்.

3) ஒப்பந்த ஊழியர்களுக்கு மாதந்தோறும் 5-ம்தேதிக்குள் ஊதியம் வழங்க வேண்டும் என மாநாடு நிர்வாகத்தை கோருகிறது.

4) ஒப்பந்த பணி தன்மை UNSKILLED /SEMISKILLED /HIGH  SKILLED   என அடையாளப்படுத்தி  சமஊதியம் வழங்கப்பட தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

5) ஒப்பந்த ஊழியர்களின் ஊதிய விபரம் / EPF, ESI பிடித்தம் எண் ஆகிய தகவல் அடங்கிய ஊதியப் பட்டியல் வழங்கப் படவேண்டும்..

6) EPF / ESI  பிடித்தம்  குறித்த தகவல்கள் தொழிலாளர்களுக்கு முறையாக வழங்கப்படவேண்டும்.

7) ஒப்பந்த ஊழியர்களின் பணிச்சான்று (SERVICE CERTIFICATE ) வழங்கப்பட வேண்டும்.

8) ஆண்டுதோறும் அனைத்து ஒப்பந்த ஊழியர்களுக்கும் உத்திரவாதமான (ASSURED) போனஸ் வழங்கப்படவேண்டும்.

9) ஒப்பந்த ஊழியர்களுக்கு நிர்வாகம் / ஒப்பந்தக்காரர் அடையாள அட்டை வழங்க வேண்டும்..

10) மாவட்ட அளவிலான ஒப்பந்ததாரர்களின் பட்டியல்,முகவரி, ID விபரம் வெளியிடப்படவேண்டும்.அவர்களின் கீழ் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களின்பெயர்ப் பட்டியலும் வெளியிடப்பட வேண்டும்.

11) ஒப்பந்த ஊழியர்கள் அனைவருக்கும் குரூப்இன்சூரன்ஸ் திட்டம் உருவாக்கிட வேண்டும்.

12) ஒப்பந்த ஊழியர்களுக்கான உத்தரவுகள்,வழிகாட்டல்கள், விளக்க உத்தரவுகள் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட மாநில சங்கம் திட்டமிடவேண்டும்.

13) "E-SEWA'  முறையில் EPF கட்டப்படவேண்டும்.பணியாற்றும் மாவட்டத்திலேயே EPF தொகையைஒப்பந்த ஊழியர்களுக்கு கட்டிட நடவடிக்கைஎடுக்கப்பட வேண்டும்.

14)ஒப்பந்த ஊழியர்களின் பிரச்சனைகளைகண்காணித்து முறைப்படுத்திட ஒரு தனி பொறுப்புஅதிகாரி நியமித்திட வேண்டும். 

15) பரிவு அடிப்படைப் பணி விண்ணப்பித்து பணிமறுக்கப்பட்டவர்களுக்கு தற்காலிகமாக ஒப்பந்த ஊழியர் பணி வழங்கிட மாநில நிர்வாகத்தை இந்தசிறப்பு மாநாடு கோருகிறது..

16) துப்புரவுத் தொழிலாளர்களுக்கு குறைந்த பட்சம் 4 மணிநேரம் பணி வழங்கப்பட வேண்டும்.


        சிறப்பு மாநாட்டை சிறப்பாக நடத்திட்ட மாவட்ட செயலர் தோழர் மாரி , மாவட்ட தலைவர் முருகன் உள்ளிட்ட காரைக்குடி மாவட்ட தோழர்களுக்கு நமது நெஞ்சம் நிறைந்த நன்றி 
ஒன்றுபட்டு போர் புரிந்தே 
உயர்த்துவோம் செங்கொடியை
 இன்றுடன் தீருமடா 
இம்சை முறைகளெல்லாம் 
                                              -தோழர் ஜீவா 

                                                                  தோழமையுள்ள 

தோழர் ஆர் கே             M விஜய்ஆரோக்கியராஜ்                   R செல்வம் 
மாநிலத்தலைவர்             மாநில பொருளாளர்   மாநில பொதுச்செயலாளர் 

தோழர் R.K. சிறப்பு கூட்டம் சிதம்பரம்

தோழர் ஆர்.கே. சொந்தவேலையாக சிதம்பரம் வந்தபோது அவரை பயன்படுத்தி சிறப்புக்கூட்டம் நடத்தப்பட்டது. அந்த கூட்டத்தில் NFTE,AIBSNLEA,BSNLEU,ஆகிய சங்கங்களை சேர்ந்த 60 க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர். 10 க்கும் மேற்பட்ட ஒப்பந்த ஊழியர்களும் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.
தோழர் ஆர்.கே. உரையில் நிர்வாகத்தின் செயல்பாடுகள் குறித்தும் காரைக்குடியில் நடைபெற்ற ஒப்பந்த ஊழியர் சிறப்பு மாநாட்டை பற்றியும் அவர்களுக்கு நாம் செய்ய வேண்டிய  கடமைகள் பற்றியும் RGB மற்றும் பொது தேர்தலில்  நமது கடமைகள் பற்றியும் விரிவாக பேசினார்.






போராட்டம் ஒத்திவைப்பு

இன்று (01.04.2014) நமது பொது மேலாளருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து, நாம் நடத்த இருந்த ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட போராட்டங்களை ஒத்திவைப்பது என்று இரண்டு சங்கங்களும் இணைந்து முடிவு செய்துள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்

இதய அஞ்சலி




NFTE மாவட்ட சங்க துணை தலைவரும், முன்னாள் மாவட்ட செயலரும், தலைவரும்,  NFTE மாநில சங்க முன்னாள் நிர்வாகியாகவும் சங்கத்தின் பல பொறுப்புகளை திறம்பட நிறைவேற்றியவரும்  NFTE சங்கத்தில் துடிப்பு மிக்க செயல்பாடுகள் மிக்கவருமான
 அருமைத் தோழர் P பிச்சைபிள்ளை 
அவர்கள் 31-03-2014 அன்று  இயற்கை எய்தினார் 


தோழரின் மறைவுக்கு செங்கொடி தாழ்த்தி நமது இதய அஞ்சலியை உரித்தாக்குகிறோம்.

இறுதி சடங்குகள் 01-04-2014 அன்று மாலை வில்வநகர் தொலைபேசி ஊழியர் குடியிருப்பு அன்னாரின் இல்லத்திலிருந்து நடைபெறும் 


NFTE மாவட்ட சங்கம் 




        தோழமையுள்ள 

K  T சம்பந்தம்        இரா ஸ்ரீதர் 
        மாவட்ட செயலர்கள்