.

Monday, March 31, 2014

தோழர் எஸ்ஸார்சி பணி ஓய்வு

         நம்மால் எஸ்ஸார்சி என்று அன்போடு அழைக்கப்படுகின்ற தோழர் S ராமசந்திரன் அவர்கள் 31-03-2014 -ல் சென்னை தொலைபேசியில் பணியாற்றி ஓய்வு பெறுகிறார்.  கடலூர் மாவட்டத்தில் பல ஆண்டுகள் பணியாற்றியவர். தோழமையோடும் மனித நேயத்தோடும் நம்மோடு பழகுபவர். தொழிற்சங்கத்தில் பல  பொறுப்புகளை  ஏற்று செயல்பட்டபோதும், தொழிற்சங்க பொறுப்புகள் இல்லாதபோதும் நமக்கெல்லாம் தொடர்ந்து வழிகாட்டியாக இருந்தவர். தொலைபேசி தோழனில் தொடர்ந்து எழுதியவர். பகைவனுக்கும் அருள்வாய் நன் நெஞ்சே என்று நடந்து கொண்டவர்.
        புதினம், சிறுகதை, கவிதை, கட்டுரை, மொழியாக்கம் என பல தளங்களில் படைப்புகளை தந்து வருகின்றவர்.  ஆங்கில மொழியிலும் கட்டுரை கவிதை படைப்புகள் வந்துள்ளன.  இவர் எழுதிய நெருப்புக்கு ஏது உறக்கம் தமிழக அரசின் பரிசு பெற்றது.
        1999-ல்  மாவட்ட செயலராக தோழர் R ஸ்ரீதர் பணியாற்றிய பொது கடலூரில் நடைபெற்ற NFTE வெள்ளிவிழா மாநாட்டில் தோழர் சிரில் நினைவு அறக்கட்டளை துவக்கப்பட்டது.  தோழர் எஸ்ஸார்சி தொடர்ந்து ஒன்பது ஆண்டுகாலம் அதன் பொதுச்செயலராக சிறப்பாக பணியாற்றியவர்.

நண்பனாய், மந்திரியாய், நல்லாசிரியனாய்  - நாம் பார்க்கின்றோம் 

பணி ஓய்வு காலம் மேலும் சிறக்கட்டும்  

Wednesday, March 26, 2014

வங்கி ஊழியர் சங்கங்களை பாராட்டும் தினமணி

தனிநபர்களை முன்நிறுத்தாமல் இயக்கத்தையே முன் நிறுத்தும் வங்கி ஊழியர் சங்கங்களை நாமும் பாராட்டுவோம் 

Thursday, March 20, 2014

சிதம்பரத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரகூட்டம்

சிதம்பரம்,கட்டுமன்னார்கோயில் பகுதிகளில் கூட்டணி சங்க தலைவர்களுடன் வேட்பாளர் அறிமுக தேர்தல் பிரச்சாரகூட்டம் நடைபெற்றது.60 க்கும் மேற்பட்ட அனைத்து சங்க தோழர்களும்,தோழியர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.






Wednesday, March 19, 2014

கண்டன ஆர்ப்பாட்டம்

NLC ஒப்பந்த ஊழியர் மத்திய பாதுகாப்பு படை வீரரால் சுட்டுகொல்லபட்டதை கண்டித்து இணைந்த கண்டன ஆர்ப்பாட்டம் கடலூர் மாவட்டம் முழுவதும்  நடைபெற்றது. அனைத்து சங்கங்களை சார்ந்த  தோழர்கள் கலந்து கொண்டனர் .

கடலூர் மாவட்ட அலுவலகம் முன்பு 















திண்டிவனம்  தொலைபேசி நிலையம் முன்பு 




செஞ்சி   தொலைபேசி நிலையம் முன்பு 



சிதம்பரம் தொலைபேசி நிலையம் முன்பு 

Tuesday, March 18, 2014

நெய்வேலி NLC ஒப்பந்த ஊழியர் சுட்டுக்கொலை -ஆர்ப்பாட்ட அறைகூவல்


நெய்வேலி NLC ஒப்பந்த ஊழியர் ராஜா  CISF  வீரரால் சுட்டுக்கொல்லப்பட்டதை கண்டித்தும் AITUC மாவட்ட செயலாளர் சேகர் தாக்கப்பட்டதை கண்டித்தும் அனைத்து கிளைகளிலும் இணைந்த ஆர்ப்பாட்டம்  நடத்த அறைகூவல் விடப்படுகிறது . 

இரங்கல்

நமது SDE/CM/சிதம்பரம் திரு S ராஜு  அவர்களின் தந்தையார்  இன்று(17-03-2014) இரவு     காலமானார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். பிரிவால் துயருறும் அவரது குடும்பத்தாருக்கு மாவட்டச் சங்கம் தனது ஆழ்ந்த இரங்கலை உரித்தாக்குகிறது.

இறுதி நிகழ்ச்சிகள் சிதம்பரத்தில்  18-03-2014 அன்று மதியம்  2 மணியளவில்  நடைபெறும் .