.

Monday, June 23, 2014

தமிழ் மாநில செயற்குழு - சேலம் 20.06.2014

சேலம்
ஒற்றுமையின் பாலம்

20/06/2014 அன்று சேலத்தில்  
தோழியர்.லைலா பானு அவர்கள்
 தேசியக்கொடியை ஏற்றி வைக்க 
தோழர்.குன்னூர் இராமசாமி அவர்கள் 
சங்கக்கொடியை ஏற்றி வைக்க
 அவையடக்கம் மிகுந்த அவையடக்கத் தெரிந்த  
தோழர்.இலட்சம் அவர்கள் தலைமையேற்க

சேலம் மூத்தவர் தோழர்.இராஜா அவர்கள் 
நீத்தாருக்கு அஞ்சலி உரைக்க
இளையவர் பாலகுமார்
  வந்தோருக்கு வரவேற்புரையாற்ற
சேலத்தின் கூடவே இருக்கும் வேலூர் 
சென்னக்கேசவன் கூடுதல் வரவேற்பு நல்க 

இணக்கம் மிகுந்து இனிமை மிகுந்து 
 பொறுமையோடு ஒற்றுமையின் அருமை காத்து 
நமது தமிழ் மாநில செயற்குழு 
முக்கனியின் சுவை மிகுந்து நடந்து முடிந்துள்ளது.

மாநிலச்செயலர் தோழர்.பட்டாபி அவர்கள் 
திசை திரும்பிய தேசம், 
திசை மாறாமல் செல்லும் NFTE சங்கம், 
திசை தெரியாமல் நிற்கும் BSNL 
ஆகியவை பற்றி அருமையான சிந்தனைகளை 
செய்திகளை நல்கினார்.

கோவை சுப்பராயன் அவர்கள் 
ஒற்றுமையின் அவசியத்தை உணர்வோடு வலியுறுத்தி 
அதற்காக பாடுபட்ட தோழர்கள்.ஆர்.கே., மாலி
 ஆகியோரின் பங்களிப்பை பாராட்டினார்.

சம்மேளனச்செயலர் இலக்கியச்செம்மல் தோழர்.ஜெயராமன் அவர்கள் ஒற்றுமையை பிரசவிக்கத் தான் மேற்கொண்ட தவத்தையும் அதனால் பட்ட வலியையும் இலக்கிய வழியில் இன்முகம் மாறாமல்  கூறினார்.

சம்மேளன அமைப்புச்செயலர் தோழர்.கோபாலகிருஷ்ணன் அவர்கள் அமைப்பு விதிகளின் அவசியம் கூறி வாழ்த்துரை வழங்கினார்.

சிறப்பு அழைப்பாளர்கள் தோழர்கள்.சேது,ஜெயபால்,தமிழ்மணி ஆகியோர்  ஒற்றுமை பெருகிட உணர்ச்சிப்பெருக்கோடு உரையாற்றினர்.

ஒப்பந்த ஊழியர் சங்க மாநிலச்செயலர் தோழர்.செல்வம் அவர்கள் 17/07/2014 அன்று சென்னையில்  நடைபெற இருக்கும் ஒப்பந்த ஊழியர் போராட்டத்திற்கு அனைவரையும் அழைத்தார். 

RJCM செயல்பாடு மற்றும் பணிக்குழு பற்றி 
முன்னணித்தோழர்கள் தங்கள் கருத்துக்களை 
கருத்தாழமுடன் எடுத்துரைத்தனர்.

மாவட்டச்செயலர்கள்,மாநிலச்சங்க நிர்வாகிகள் தங்கள் பகுதி பிரச்சினைகளை எவ்வித பிரச்சினையுமின்றி பேசி முடித்தனர்.

நிறைவாக அருமைத்தோழர்.ஆர்.கே., அவர்கள் இன்றைய புதிய சூழலில் தொழிலாளர்கள் தங்கள் தொல்லைகள் தீர்ந்திட, நல்லவை நடந்திட  எல்லை கடந்த ஒற்றுமை காக்கவும், தங்களைச் சுற்றியுள்ள குறுகிய எல்லைகளைத் தகர்த்திடவும் அறைகூவல் விடுத்தார்.

பெற்றவர் கை மாங்கனி பெற்றிட
 அவசரமாக உலகைச்சுற்றியவர் உண்டு...
இருந்த இடத்திலேயே பெற்றோரைச்சுற்றி  
மாங்கனி பெற்றவரும் உண்டு...
நமது இயக்கமோ.. மாங்கனி நகரில் 
தன்னையே சுற்றி  ஒற்றுமைக்கனி பறித்துள்ளது.

நீடு வாழ்க...சேலம்..
நிலைத்து வாழ்க..
ஒற்றுமைப்பா(ப)லம்..

நன்றி காரைக்குடி வலைத்தளம்.

No comments:

Post a Comment