Monday, July 1, 2013

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் வேலை நிறுத்தம் -ஏன் ?





'நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் வேலை நிறுத்தம் -ஏன் ?' நமது மாநில துணைத்தலைவர் V .லோகநாதன் அவர்களின் கட்டுரை இங்கே...




சிதம்பரம் தோழர் S .சுபாஷ் T M பணி நிறைவு பாராட்டு விழா - 29-06-2013

            சிதம்பரம் தோழர் S சுபாஷ் அவர்கள் ஜூன் 30 அன்று பணி ஒய்வு பெறுகிறார். நமது இலாக்காவில்  39 ஆண்டுகள் முன்னணி ஊழியராக திறம்பட செயல்பட்டார். சங்க பணியிலும்  இலாக்கா பணியிலும் ஆர்வத்துடன் சேவை செய்திட்ட தோழரின் பணி ஒய்வு காலம் சிறக்க வாழ்த்தி நமது சிதம்பரம் கிளையின் சார்பாக 29-06-2013 அன்று பணி ஒய்வு பாராட்டு விழ சிறப்பாக நடைபெற்றது .

             அதில்  முன்னாள் சம்மேளன செயலர் தோழர் R K , முன்னாள் மாநில தலைவர் S தமிழ்மணி , மாநில துணைத்தலைவர் V லோகநாதன், மாவட்ட செயலர் இரா ஸ்ரீதர் , மாவட்ட தலைவர் R செல்வம், கடலூர் மாவட்ட தொழிசங்க தலைவர்கள் ரகு, ரங்கநாதன் ஆகியோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.











               'ஒலிக்கதிர் / தொலைபேசி தோழன்' நன்கொடையாக ரூ 2000/- அளித்த தோழருக்கு  நமது நெஞ்சம்  நிறைந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறோம்.

கல்லை சிறப்பு நிகழ்ச்சி -28-06-2013

மறைந்த தோழர் B .R  படத்திறப்பு விழா மற்றும் கிளை புனரமைப்பு நிகழ்ச்சி  கிளைத்தலைவர்  தோழர் N .தமிழ்ச்செல்வன் தலைமையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

முன்னாள் மாவட்ட செயலாளர் P .சுந்தரமூர்த்தி,  B .R  படத்தை  திறந்து வைத்து சிறப்புரையாற்றினார் .  மாநில உதவி தலைவர் V . லோகநாதன் துவக்கவுரையாற்றினார் . நமது மாவட்ட தலைவர் R .செல்வம் , மாவட்ட செயலாளர் இரா.ஸ்ரீதர்  ஆகியோர் விழாவில் சிறப்புரையாற்றினர்.மற்றும் தோழர் D .மோகன் ராஜ், மாவட்ட துணை தலைவர் S .அன்பழகன், மாவட்ட அமைப்பு செயலாளர் A .C .முகுந்தன்  ஆகியோர் விழாவில் கலந்து கொண்டு உரையாற்றினர்.













புதிய கிளைச் சங்க பொறுப்பாளர்களாக தோழர் K .பாண்டியன் தலைவராகவும் , தோழர் S .மணி செயலராகவும் தோழர் P .ராமலிங்கம் பொருளராகவும் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டனர் .

புதிய நிர்வாகிகள் பணி சிறக்க வாழ்த்துகிறோம்.