.

Saturday, March 30, 2013

New DoT Secretary

Current DoT Secretary Rentala Chandrasekhar is retiring at the end of this month. The Secretary of Heavy Industries, MF Farooqi may take over the position of Secretary of Department of Telecommunications (DoT), according to news sources. தற்போதைய DoT செயலர் திரு சந்திரசேகர் ஒய்வு பெறுவதால் திரு. M. F ப்ரூக் அவர்கள் புதிய DoT செயலராக பொறுப்பேற்க உள்ளார்.



Retirement





31/03/2013 அன்று பணி ஒய்வு பெறும் கீழ்க்கண்ட தோழர்கள் / தோழியர்களின் 
பணி ஓய்வுக்காலம் நல்வளத்துடனும் ஆரோக்கியத்துடனும் அமைந்திட மாவட்டச்சங்கம்  வாழ்த்துகிறது!


1.  தோழியர் விஜயலக்ஷ்மி  V. (AGM-CUDDALORE)
2.  தோழியர் சுமித்ரா.  G (JTO-CHITHAMBARAM)
3.  தோழர்  ஸ்ரீனிவாசன்.  R (SSS, VILLUPURAM)
4.  தோழர். ஷனுமுகம்  K. (TTA-CHIDAMBARAM)
5.  தோழர்.  மாலிக் பாஷா  I (Sr.TOA(P), TINDIVANAM)
6.  தோழர்.  முத்துசாமி  K (TM, KALLAKURICHI)
7.  தோழர்.  கதிர்வேலு  K (TM, PENNADAM)
8.  திரு. வேலுமணி  P (SDE-CUDDALORE)


Friday, March 29, 2013

இரங்கல்


தோழர் எஸ். ரவிச்சந்திரன், T,M, புதுச்சத்திரம்  அவர்களது தந்தையார், 28/03/2013 அன்று காலமானார். அன்னாரது இறுதிச் சடங்குகள், கணக்கன்பாளையம் கிராமத்தில் இன்று (29/03/2013) மாலை நடைபெறும். மறைந்த பெரியவருக்கு நமது அஞ்சலியினையும், தோழர் எஸ். ரவிச்சந்திரன் மற்றும் அவரது குடும்பத்தாருக்கு நமது பரிவினையும் தெரிவித்துக் கொள்கிறோம்.


Thursday, March 28, 2013

I.D.A உயர்வு:

01/04/2013 முதல் I.D.A .3.4% உயர்ந்துள்ளது! 
எனவே ஏப்ரல்-2013 முதல் I. D.A 74.9%. கிடைக்கும்!!

மகத்தான வெற்றியை நோக்கி NFTE….



        6வது தேர்தல் பிரச்சாரம் பிப்ரவரி மாதம் தொடங்கியபோது நாம் 40% வோட்டுகள் வாங்கி முதல் இடத்திற்கு வந்துவிடுவோம் என்று உறுதியாக நம்பினோம்ஏனென்றால், 2004-ல்இருந்து அங்கீகாரத்தில் இருந்த BSNLEU சங்கம் உருப்படியாகஎந்த சாதனையும் செய்யவில்லை என்பதே காரணம்ஆனால்நம்முடைய இந்த ஒரு மாத தேர்தல் சுற்றுபயணத்திற்கு பிறகுநாம் உறுதியாக 51% மேல் வாங்கிவிடுவோம் என்ற நம்பிக்கைவந்து விட்டதுநாடெங்கும் BSNLEU-க்கு எதிரான அலைவீசுகிறது
ஆறாவது அங்கீகார தேர்தலில் வாக்களிக்க இருப்போர் சுமார்2,04,000 பேர்நாம் உறுதியாக  இந்தியா முழுவதும்பெருவாரியான 1,05,000 வோட்டுகள் வாங்கி முதன்மைசங்கமாக ஆகுவது உறுதிநாம் முக்கியமாக கவனிக்கவேண்டியது என்னவென்றால் கடந்த

ஐந்து சரிபார்ப்பு தேர்தல்களிலும் நாம் 35% வோட்டுகள்குறையாமல் வைத்திருந்தோம்அதுவும் கடந்த 8 வருடமாகBSNLEU- சங்கம் ஒன்பது சங்கங்களின் கூட்டணியோடுபணபலம்ஆள்பலம் மற்றும் அதிகார பலம் இவை எல்லாம்வைத்திருந்தும் அவர்களால் 46% வோட்டுகள் மட்டுமேவாங்க முடிந்ததுகுறிப்பாக கடந்த தேர்தலில்கூட அதுபெரும்பான்மை வோட்டுகள் பெற முடியவில்லைஆதலால்இந்த தேர்தலில் அது 30% வோட்டுகள் வாங்குவதே கடினம்,.BSNLEU- சங்க உறுப்பினர்களே கடந்த மூன்றாடுகளாகபோனஸ் இல்லாதது, LTC CUT, 10 நாள் விடுப்பினைகாசாக்குதல்மூன்று மாதத்திற்கு ஒருமுறை பெறுகின்றமருத்துவ அலவன்ஸ் பறிபோனது ஆகியவற்றால் விரக்தியின்எல்லைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

78.2% கிராக்கிப்படி இணைப்பு 01/01/2007-ல் இருந்து பெறாததால்சுமார் 6000 கோடி ரூபாய் தொழிலாளி இழந்துள்ளான்.அதுமட்டுமல்லாமல் NEPP-ல் SC/ST ஊழியர் பதவி உயர்வில்ஒதுக்கீடு என்பதை BSNLEU சரண்டர் செய்துவிட்டதால் SC/STஊழியர் கடும் அதிருப்தியில் உள்ளனர். TTA தோழர்களுக்குகடந்த 8எட்டு வருடங்களாக 30% FITMENT, PENSION BENEFITஆகியவை இன்னும் தீர்க்கப்படாமல் உள்ளதால் SNATTA இந்தமுறை NFTE-BSNL –உடன் கூட்டணி வைத்துள்ளது.



மொத்தம் 35 மாநிலங்களில்  6 மாநிலங்கள் பெரிதானவை.அவை தமிழ்நாடு,ஆந்திரா,குஜராத்கர்னாடகாகேரளா,மஹாராஷ்டிரா ஆகும்.  இதில் கேரளாவைத் (ஒருவேளை)  தவிர மற்ற மாநிலங்களில் நாம் வெற்றி பெறுவது உறுதிஆகிவிட்டதுகடந்த 8 வருடங்களாக எதுவும் தொழிலாளிக்குஉருப்படியாக செய்யாத BSNLEU சங்கம் தனது தவறுக்குNFTE-BSNL – நோக்கி கைகாட்டுவதை பார்த்து தொழிலாளிகைகொட்டி சிரிக்கிறான்அதுமட்டுமலாமல் அபிமன்யுகார்ப்பரேஷ்ன் ஆனதுதான் இதற்கு காரணம் என்று கூறுவதுபேதமைகடந்த 13 ஆண்டுகளாக ITS OFFICERS கார்ப்பரேஷன்வேண்டாம் என்று இதுவரை வெளியே இருக்கவில்லையா?அதுபோல் இருக்க வேண்டியதுதானேயார் தடுத்தது? BSNLநிர்வாகத்தில் எதாவது நல்லது நடந்தால் அதற்கு BSNLEUகாரணம் என்றும் தவறு எதேனும் நடந்தால் 8 வருடமாகஅங்கீகாரத்தில் இல்லாத NFTE-BSNL தான் காரணம் என்றுகூறுவதையும் தொழிலாளி நன்கு கவனித்து கொண்டுதான்இருக்கிறான். DMK சங்கத்துடன் கூட்டணி வைப்பதற்காக அதன்மந்திரிகள் தயாநிதி மற்றும் ராசா செய்த ஊழலை கண்டுகொள்ளாமல் இருந்தவர்கள்தானே இவர்கள்ஆதலால் வரும்6வது சரிபார்ப்பு தேர்தலில் BSNLEU மண்ணை கவ்வப் போவதுநிச்சயம். 18/04/2013 வோட்டுகள் எண்ணி முடிக்கும்போது NFTE-BSNL முதன்மை சங்கமாக வந்திருப்பது நிச்சயம்.


சி.கே.மதிவாணன்மாநிலச் செயலர்சென்னை தொலைபேசி, 26/03/13 (நன்றி: கோவை வலை)

Wednesday, March 27, 2013

பாராட்டு

 J.A.O  தேர்வில் வெற்றி பெற்றுள்ள கடலூர் தோழர் ஏ. சாதிக் பாஷா மற்றும் கள்ளக்குறிச்சி  தோழர் பி. நெடுமாறன் ஆகியோரை  மாவட்டச் சங்கம் பாராட்டுகிறது! வாழ்த்துகிறது.

Monday, March 25, 2013

மத்திய-மாநிலத் தலைவர்கள் நமது பகுதியில் பிரச்சாரம்

 நமது மத்திய, மாநிலச் சங்க  நிர்வாகிகள் மார்ச் மாதம் 26,27 மற்றும் 28 தேதிகளில் நமது மாவட்டத்தில் சுற்றுப்பயனம் மேற் கொள்கின்றார்கள். தலைவர்களின் பங்கேற்பை கிளைச் செயலர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்டச் சங்கம் கேட்டுக் கொள்கிறது. சுற்றுப்பயண விபரங்கள் 
-------------------------------------------------------------------------------------------------------------------------- 
26/03/2013
நேரம்:  மாலை 5 மணி:      
இடம்: பொது மேலாளர் அலுவலகம்.

பங்கேற்கும் தலைவர்கள்

1. தோழர் C.K.மதிவானன்   (துணைப்பொதுச் செயலர்),
2. தோழர் ஜி. ஜெயராமன் (சம்மேளணச் செயலர்)
3. தோழர் டி. சிவசங்கர்   (மாநிலத் தலைவர், SNATTA)
4.  தோழர் வி. ஹரிகிருஷ்ணன் (மானிலச் செயலர் – 
                                                        பாட்டாளி தொழிற்சங்கம்)
------------------------------------------------------------------------------------------------------------------------


27/03/2013
செஞ்சி          : காலை ஒன்பது மணி
திண்டிவனம்     : மதியஉணவு இடைவேளை
விழுப்புரம்       : மாலை ஐந்துமணி    
                    (தொலைபேசியகம்)

பங்கேற்கும் தலைவர்கள்
1.      தோழர் ஆர். பட்டாபிராமன் (மாநிலச் செயலர்)
2.      தோழர் கே. அசோக்ராஜன்  (மாநிலப் பொருளர்)
3.      தோழர் எஸ். தமிழ்மணி    (முன்னாள் மாநிலத் தலைவர்)
 ---------------------------------------------------------------------------- 
27/03/2013
நெய்வேலி         : காலை ஒன்பது மணி
விருத்தாஜலம்     : மதியஉணவு இடைவேளை
கள்ளக்குறிச்சி      : மாலை ஐந்து மணி 
                     (தொலைபேசியகம்)1.
1.      தோழர் L.  சுப்பராயன்  (மாநில உதவிச் செயலர்)
2.     தோழர் ஏ. ராபர்ட்     (மாநில உதவிச் செயலர்)
3.      தோழர் வி. லோகநாதன் (மாநில உதவித் தலைவர்)
4.      தோழர் என். அன்பழகன்  (மாநில அமைப்புச் செயலர்)
  ----------------------------------------------------------------------------------------  


28/03/2013

அரகண்டநல்லூர்    : காலை ஒன்பது மணி
உளுந்தூர்பேட்டை   : மதியஉணவுஇடைவேளை
பண்ருட்டி           : மாலை ஐந்து மணி 
                      (தொலைபேசியகம்)

1.      தோழர் L.  சுப்பராயன்  (மாநில உதவிச் செயலர்)
2.     தோழர் ஏ. ராபர்ட்     (மாநில உதவிச் செயலர்)
3.      தோழர் வி. லோகநாதன் (மாநில உதவித் தலைவர்)
4.      தோழர் என். அன்பழகன்  (மாநில அமைப்புச் செயலர்)

 ---------------------------------------------------------------------------------------- 
28/03/2013
சிதம்பரம்:   காலை ஒன்பது மணி 
கடலூர்  :   மதியம் தோழர்/ தோழியர்களை 
            நேரடியாக்ச் சந்தித்தல்

---------------------------------------------------------------------------------------------------------------------------------------

கிளைச் செயலர்கள், நமக்காக வருகை தரும் தலைவர்களை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்வது அவசியம். 

-மாவட்டச் சங்கம்

தேர்தல் பொறுப்பாளர்கள்

 றாவது தேர்தல் பிரச்சார துவக்க விழா 19/03/2013 அன்று மதியம் பொது மேலாளர் அலுவலகத்தில் துவங்கியது. இது பற்றிய செய்தித் தொகுப்பு முன்னரே நமது வலைத்தளத்தில் வெளியிடப் பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக நமது மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு பொறுப்பாளர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர்.

கடலூர்:
தோழர்கள் A. சாதிக் பாஷா, எம். தினகரன், 
எஸ். ஆனந்தன், ஏ.ஸி. முகுந்தன், வி. கீதா.

சிதம்பரம்:
தோழர்கள் P. பிச்சைப்பிள்ளை, D. ரவிச்சந்திரன், K. கிருஷ்ணகுமார்.

விருத்தாஜலம்
தோழர்கள் வி. லோகனாதன், என். அன்பழகன், எஸ். அன்பழகன், கே.அம்பாயிரம்.

நெய்வேலி
தோழர்கள் ஜி. ரங்கராஜ், பி. சுந்தரமூர்த்தி.

கள்ளக் குறிச்சி
தோழர்கள் B. ராஜேந்திரன், பி. அழகிரி,
 வி. இளங்கோவன்.

விழுப்புரம்
தோழர்கள் இரா. ஸ்ரீதர், எம். மஞ்சினி,
 கே.மகேஷ்வரன், ஏ.ரவிச்சந்திரன்

திண்டிவனம்
தோழர்கள் ஆர். செல்வம், கே. பாண்டியன்,
 ஜி. ஜெயச்சந்திரன்.
----------------------------------------------------------------------------------
குறிப்பு: சம்மேளனச் செயலர் தோழர் ஜி.ஜெயராமன் அவர்களை, அவரது சுற்றுப்பயனத்திற்கு ஏற்ப, கிளைகளில் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். 
---------------------------------------------------------------------------------

இரங்கல்

விழுப்புரம் தோழர் வி. ஜெயராமன் (டெலிகாம் மெக்கானிக்) அவர்களது தாயார் இன்று (25/03/2013) மாலை காலமானார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். அன்னாரது இறுதிச் சடங்குகள், வெள்ளையாம்பட்டு கிராமத்தில் நாளை (26/03/2013) மாலை நடைபெறும். தோழர் வி. ஜெயராமன் அவர்களுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் மாவட்டச் சங்கம் தனது ஆழ்ந்த அனுதாபத் 
தினையும் , மறைந்த அம்மையாருக்கு அஞ்சலியினையும் உரித்தாக்குகிறது.

எட்டாண்டு கால வறட்சி போதாதா? எண் 15-ல் NFTE க்கு வாக்களிப்போம்.

Sunday, March 24, 2013

இரங்கல்

 புவனகிரி தொலைபேசி நிலையத்தில் பணி புரியும் தோழர் M. சஞ்சீவி அவர்களது தாயார் இன்று (24/03/2013) மாலை காலமானார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். இறுதிச் சடங்குகள் நாளை (25/03/2013), புதுச் சத்திரத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும். மறைந்த அம்மையாருக்கு நமது ஆழ்ந்த இரங்கலை உரித்தாக்கு கிறோம். தோழர் சஞ்சீவி அவர்களுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் நமது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

-மாவட்டச் சங்கம்.
 கடலூர் GM(O) கிளைத் தோழர். G. அசோகன், SSS, அவர்களது   பணிஓய்வு பாரட்டுவிழா

     மாவட்ட அலுவலக் கிளையிலன் தோழர். G. அசோகன், SSS – TRA CDL

Wednesday, March 20, 2013

இரங்கல்


திருமதி N. ஜெயந்தி அபர்ணா (DGM CFA) அவர்களது தந்தையார்  
திரு. K. நாகசுப்ரமணியன் அவர்கள் இன்று (20/03/2013) காலை, சென்னையில், காலமானர் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். பிரிவால் துயருறும் அவரது குடும்பத்தாருக்கு மாவட்டச் சங்கம் தனது ஆழ்ந்த  இரங்கலை உரித்தாக்குகிறது. 

இறுதி ஊர்வலம்  நாளை (21/03/2013) காலை, கடலூர், மஞ்சக்குப்பம் , பாஷ்யம் ரெட்டித் தெருவில் (வள்ளிவிலாஸ் குடியிருப்பு) உள்ள அவரது இல்லத்தி லிருந்து புறப்படும் .


   







Tuesday, March 19, 2013

தோழர் இஸ்லாம்

றாவது உறுப்பினர் சரிபார்ப்பு தேர்தல் துவக்க விழா இன்று (19/03/2013) மதியம் பொது மேலாளர் அலுவலக வாயிலில் துவங்கியது. விழாவில் நமது அகில இந்திய சங்கத் தலைவர் தோழர் இஸ்லாம் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். விழாவில் அண்டை மாவட்டத் திலிருந்தும் வெளியூர்களிலிருந்தும் ஏராளமான தோழர்கள் கலந்து கொண்டனர். தோழர் இஸ்லாம் அவர்களது உரையினை நமது ஆசான் தோழர் ரகு அவர்கள் தமக்கே உரித்தான வகையில் சிறப்பாக மொழி பெயர்த்தார். 

விழாவில் SNATTA மாநிலத்தலைவர் தோழர் D. சிவசங்கர்  அவர்களும், PEWA மாவட்ட பொருளாளர் தோழர் சிதம்பரம் மனோகர் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தது குறிப்பிடத்தக்கது. சம்மேளனச் செயலர் தோழர் ஜி. ஜெயராமன் உரையாற்றினார்.

மேலும் இம்மாதத்திய  மாவட்ட சங்க  இதழ் 
"தொலைபேசித் தோழன் " தோழர் ரகு அவர்கள் வழங்கப்பட்டு  தோழர் ரங்கநாதன் அவர்கள் பெற்றுக் கொள்ளப்பட்டது.



இனி தோழர் இஸ்லாம் உரையிலிருந்து சில பகுதிகள்

முதலில் தோழர்கள் ரங்கனாதன், ரகுநாதன் அவர்களின் ஆசியினைக் கோருகிறேன்.

அறுபது வருட வரலாற்றினையும், செழுமிய அனுபவங்களையும் உள்ளடக்கிய நமது சங்கம், இப்பொழுது ஒரு தீர்ப்பினை எதிர்நோக்கி காத்திருக்கிறது. இப்பொழுது இல்லை எனில் பின் எப்பொழுதும் இல்லை என்ற ஒரு நெருக்கடியான சூழலில் உங்களைச் சந்திக்கிறேன். நான் "இப்பொழு இல்லையெனில்.."  என்று கூறுவது நமது நிறுவனத்தை காப்பாற்றுவது பற்றி! 
ஊழியர்களின் எதிர்காலம் பற்றி !

ஒரு தொழிற்சங்கத்திடம் தொழிலாளி எதிர்பார்ப்பது என்ன? குறைந்த பட்சமாக தொழிலாளர்களை, அவர்கள்து ஆசைகளை, கோரிக்கைகளை நிறைவேற்ற பாடுபட வேண்டும் என்பது தானே? ஆனால் அங்கீகரிக்கப்பட்ட சங்கமாக விளங்கும் நம்பூதிரி சங்கம் யாரின் பிரதிநிதியாக செயலாற்றினார்கள்? சொன்னால் வெட்கம் தோழர்களே! அவர்கள் நிர்வாகத்தின் பிரதி நிதியாக செயலாற்றினார்கள். 

அவர்கள் சொன்னதிற்கும், செய்ததிற்கும் ஒரு சம்பந்தமும் இல்லை! 

ஓய்வு பெற்றவர்களுக்கும் போனஸ் கொடு என்றார்கள்! பணியில் இருப்பவர்களுக்கே போனஸ் இல்லை என்ற நிலைக்கு கொண்டு வந்தார்கள்.

நம்பூதிரியின் காலத்தில்தான் நாம் பெரும்பாலன சலுகைகளை இழந்தோம். போனஸ் LTC, மருத்துவப்படி மற்றும் இன்னும் பல.....

ஏன் சரியாக ஆடவில்லை என்றால் மேடை கோணலாக இருக்கிறது என்று பதில் வந்தால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது, நம்பூதிரி சங்கத்தில் பதில்கள் எல்லாம்.

அவர்கள் சங்கம் நடத்தத் தெரியாதவர்கள்; கோரிக்கைகளை வடிவமைக்கத் தெரியாதவர்கள்! கோரிக்கைகளை வென்றெடுக்க இயலாதவர்கள்.

ஏன் இப்படி எல்லாவற்றையும் இழந்து நிற்கிறோம் என வினவினால், அடுத்தமாதம் சம்பளம் வருகிறதா என்று பார் என பதிலுரைக்கிறார்கள்!

இதற்காகவா நாம் இவர்களைத் தேர்ந்தெடுத்தோம்?

இப்பொழுது புதிதாக ஒன்றை கண்டுபிடித்திருக்கிறார்கள். எல்லாவற்றிற்கும் காரணம் நாம் கார்பொரேட் (BSNL) ஆனதுதானாம்! கார்பொரேஷன் ஆனதற்கும் கூட NFTE தான் காரணமாம்!

விந்தை! பொய் சொல்வதற்கும்  ஒரு அளவில்லை? நாமா கார்பொரேஷன் 
ஆக வேண்டும் என குதித்தோம்? அதை முடிவெடுத்து திணித்தது அரசாங்கம் அல்லவா? தோழர் குப்தா என்ன செய்தார்? ஒவ்வொருவருக்கும் பணி உத்தரவாதம்,பென்ஷன் உத்தரவாதம் ஆகியவற்றை உறுதி செய்தாரா இல்லையா?  நிறுவனத்தின் பொருளாதார சாத்தியக்கூறு பற்றி தோழர் முழங்காத மேடை உண்டா?

நாம் அங்கீகரிக்கப்படசங்கமாக இருந்த போது, நமது நிறுவனம் இலாபத்தில் இருந்ததா இல்லையா? 

நிறுவனம் வளமாக இருந்தால்தானே நாம் வளமாக இருக்க முடியும்? நிறுவனத்தை கட்டிக் காக்க தோழர் நம்பூதிரியின் திட்டம் என்ன? நிதி நெருக்கடியினைத் தீர்க்க நம்பூதிரி ஏதேனும் திட்டம் வைத்திருக்கிறாரா?
அவரிடம் இருக்கும் ஒரே பதில் “எல்லா பழியும் NFTE-யே சேரும் என்பது தான்.

ஆனால்  நம்பூதிரி சங்கத்தினர் பம்மாத்து கோரிக்கைகளை வைப்பதில் கில்லாடிகள். உதாரணமாக  “வாரத்தில் ஐந்து நாள் வேலை! இது பெண்களின் ஓட்டுக்களை கவர்ந்து கொள்வதற்காக! அங்கீகாரத்திற்கு வந்து எட்டு வருடம் ஆயிற்றே? "ஐந்து நாள் வேலை" என்ற கோரிக்கை  என்னவாயிற்று என நாம் கேட்க வேண்டாமா?

இவர்கள்து காலத்தில்தானே 78.2 D.A மெர்ஜர் பிரச்சினை வந்தது? நமது நிறுவனத்தைத் தவிர அனைவரும் இந்த 78.2 D.A மெர்ஜரை பெற்றுவிட்டனரே?.  இதைக் கூட வாங்க முடியாத வக்கற்ற கூட்டம், கொஞ்சமும் வெட்கமின்றி மீண்டும் ஓட்டு கேட்டு வருகின்றனர்.

ஏமாறாதீகள் தோழர்களே!

நாம் அங்கீகரிக்கப் பட்டால், தோழர்களே, நிதி நெருக்கடியிலிருந்து நமது நிறுவனத்தை மீட்க முடியும். 78.2 D.A மெர்ஜர் சாத்தியமாகும். போனஸ் பெற முடியும். இழந்த பல  சலுகைகளை பெற முடியும். NEPP என்பது பரோமோஷன் பாலிஸியா அல்லது பனிஷ்மென்ட் பாலிஸியா என்று புரியவில்லை. பலருக்கு ஊதிய பிடிப்பு நிலவுகிறது. இம்மாதிரியான  பதவி உயர்வு பிரச்சினையில் நிலவும் குளறுபடிகளை நம்மால் நீக்க முடியும்..

ஆகவே தோழர்களே! BSNL நிறுவனத்தை காத்திட, பொருளாதார ரீதியில் நிறுவனத்தை நிலை நிறுத்திட, ஊழியர்களின்-குறிப்பாக குரூப் CCccசி , மற்றும் D ஊழியர்களின் நலன் காத்திட, S.C / S.T ஊழியர்களின் நலன் காத்திட NFTE சங்கத்தினை தேர்ந்தெடுங்கள். வார்த்தை ஜாலத்தினையே துணையாகக் கொண்டு , நிர்வாகத்தின் பிரதி நிதியாக மட்டுமே விளங்கும் நம்பூதிரி சங்கத்தினை வீட்டிற்கு அனுப்புங்கள்.