.

Sunday, September 15, 2013

அவசர மாவட்ட செயற்குழு தீர்மானங்கள்

NFTE கடலூர் மாவட்டம்
அவசர மாவட்ட செயற்குழு
தீர்மானங்கள்
பிரச்சினை தீர்வும் மாவட்ட நிர்வாகத்தின் அணுகுமுறையும்
       நமது முதுநிலை பொது மேலாளர் மூன்று மாவட்டத்திற்கு பொறுப்பு என்பதால் பிரச்சினை தீர்விற்கு முடிவெடுப்பதில் கால தாமதமாகிறது. எனவே நமது மாவட்டத்தின் பணி சூழலை பாதுகாக்க தொழிற்சங்கம் முன்னெடுக்கும் ஊழியர் பிரச்சினைகளை உரிய கவனம் செலுத்தி உடனடியாக தீர்க்க வேண்டுமாய் மாவட்ட நிர்வாகத்தை இந்த செயற்குழு கேட்டுக்கொள்கிறது
சேவை மேம்பாடு
      புதிய தொலைபேசி இணைப்பு, பிராட்பேண்ட் இணைப்பு ஆகியவற்றுக்கு ஊழியர்கள் , உதான் டீம் ஆகியோர் விண்ணப்பங்கள் பெற்று வந்தாலும் புதிய இணைப்பு கொடுப்பதற்கு தேவையான ட்ராப் வயர், பிராட்பேண்ட் உபகரணங்கள் இல்லை என்ற நிலைதான் உள்ளது. ஆகவே நமது மாவட்டத்தில் கேட்டவுடன் தொலைபேசி மற்றும் பிராட்பேண்ட் இணைப்பு கொடுக்கவும் அதனை தக்க வைக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமாய் மாவட்ட நிர்வாகத்தை இந்த செயற்குழு கேட்டுக்கொள்கிறது
      நமது மாவட்டத்தில் செல் டவர்கள் நிறுவப்பட்டு பல ஆண்டுகள் ஆகின்றன. பவர்கட்நேரங்களில் உடனடியாக ஜெனரேட்டர்கள் இயங்குவதற்கு தேவையான பேட்டரிகள் சரியாக இல்லாத நிலை உள்ளது.மேலும் மின்சாரம் இல்லாத நேரங்களில் BTS வேலை செய்ய அமைக்கப்பட்டுள்ள பேட்டரிகளின் Waranty Period முடிந்து தற்போது ஏறத்தாழ அனைத்து இடங்களிலும் புதிய பேட்டரி செட் அமைக்க வேண்டிய நிலையில் உள்ளது. குறிப்பாக சிதம்பரம்,விருத்தாசலம் , நெய்வேலி திருநாவலூர் பகுதிகளில் உடனடியாக மாற்றியமைத்திட வேண்டும்.பல இடங்களில் சிக்னல் கிடைக்கவில்லை .அங்கு செல் டவர் அமைப்பதற்கு பதிலாக ஏற்கனவே டவர் உள்ள இடங்களுக்கு அருகாமையிலே புதிய டவர்கள் அமைக்கபடுகின்றன. அதற்கு பதிலாக சிக்னல் இல்லாத இடங்களில் புதிய டவர்கள் அமைக்கப்பட வேண்டும் என்றும் இந்த செயற்குழு கேட்டுக்கொள்கிறது
ஒப்பந்த ஊழியர் பிரச்சினை
      இன்னோவேடிவ் செக்யூரிட்டி சொலுஷன்ஸ் ஒப்பந்ததாராக அமர்த்தப்பட்டதிலிருந்து ஒப்பந்த ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குவதில் கடுமையான கால தாமதமாகிறது. ஏழு மாதங்களாக EPF,ESI தொகையையும் கட்ட வில்லை. விதிகளை மீறிய இந்த ஒப்பந்ததாரரின் ஒப்பந்தத்தை ரத்துசெய்ய வேண்டுமாய் மாவட்ட நிர்வாகத்தை  இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது.
நிதிநிலை
      நமது மாவட்ட மாநாடு முடிந்து ஆறு மாதங்களாகின்றன. பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்திவருகிறோம். குறிப்பாக சிரில் அறக்கட்டளை தமிழ்விழா உட்பட அனைத்து விழாக்களையும் நமது தோழர்களிடம் நன்கொடை வசூலித்து தான் நடத்த வேண்டியிருக்கிறது . மேலும் மாவட்ட சங்கம் இன்னும் சிறப்பாக செயல்பட பிரச்சினை தீர்வில் போராட்டங்கள் நடத்திட சுற்றறிக்கைகள் வெளியிட தொலைபேசி தோழன் வெளியிட நிதி தேவை என்பதால் தோழர்கள் உடனடியாக நன்கொடை வழங்கிட வேண்டுமாய் இந்த மாவட்ட செயற்குழு கேட்டுக்கொள்கிறது  
அமைப்பு மாநாடு
      நமது மாநாடுகள் கூடங்களில் பல பிரச்சினைகளை விவாதிக்கிறோம் உரியவருக்கு சிறப்பு செய்கிறோம். ஆனால் அமைப்பு நிலை விவாதம் என்பது நிகழ்ச்சி நிரலில் இருக்குமே தவிர, முறையாக முழுமையாக விவாதம் நடத்த நேரம் இருப்பதில்லை ஜனநாயக முறைப்படி நடக்கும் நமது அமைப்பில் அமைப்பு நிலை விவாதம்  என்பது மிகவும் அடிப்படையானது
      எனவே நமது சங்கத்தை மேலும் முன்னெடுத்துச்செல்ல ஒவ்வொரு கிளைச்செயலரும் முழுமையாக பங்கேற்கும் வகையில் அமைப்புநிலை மாநாடு ஒன்று நடத்திட இச்செயற்குழு முடிவு செய்கிறது.
அமைப்பு விதிகளை அனுசரிப்போம்
      நமது மாவட்ட மாநாட்டிற்கு பிறகு, மாவட்டத்தில் அமைப்பு விதி மீறல்களும் குழுப்போக்கும் நீடிக்கிறது என்பதை இச்செயற்குழு கவலையுடன் பரிசீலித்தது. உதாரணமாக பொதுவான தமிழ்விழா , பணி ஓய்வு பாராட்டு விழாமுதலியவற்றில் கூட கலந்து கொள்ளாமல் புறக்கணிக்க குழுப்போக்கே காரணம்
      நீண்ட மரபுடைய நமது மாவட்ட சங்கத்தில் பொறுப்பாளர்கள் தொடர்ந்து மாறி வந்துள்ளனர்.  ஒருபோதும் புதிய நிர்வாகிகளிடம் பொறுப்பை ஒப்படைப்பதில் சிக்கல் எழுந்தது இல்லை.  ஆனால் இயக்க நடவடிக்கைகளை முடக்கும் வகையில் மாவட்ட கணக்குகள் இன்னும் ஒப்படைக்கப்படவில்லை  என்பது நமது மரபார்ந்த செயல் அல்ல என்பதை இச்செயற்குழு கவலையுடன் பதிவு செய்கிறது
இந்த நிலை நீடிக்க முடியாது. உரிய மாறுதல்களை ஏற்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட செயலருக்கு இச்செயற்குழு முழுமையான அதிகாரம் அளிக்கிறது.
ஒலிக்கதிர் பொன்விழா -வரவேற்பு குழு
      ஒலிக்கதிர் பொன்விழாவை சிறப்பாக நடத்திட அனைத்து கிளைகளின் ஒத்துழைப்பையும் இச்செயற்குழு கோருகிறது.ஒலிக்கதிர் பொன்விழா குழு  செயல் தலைவராக V.இளங்கோவன்  TTA, பொது செயலாளராக R.ஸ்ரீதர் SS, பொருளாளராக K.கிருஷ்ணகுமார் TTA ஆகியோரை இச்செயற்குழு ஒருமனதாக தேர்ந்தெடுக்கிறது. மற்ற குழுக்களை அமைப்பதற்கான அதிகாரத்தை  செயலக கூட்டத்திற்கு இச்செயற்குழு அதிகாரமளிக்கிறது.
12-09-2013
சிதம்பரம்                    R.செல்வம்                   இரா ஸ்ரீதர்
                         மாவட்ட தலைவர்         மாவட்ட செயலர்

1 comment:

  1. தோழர் அன்புதேவன் அவர்களுக்கு செயற்குழு தீர்மானத்தை PDF கோப்பில் இடம்பெற செய்து வெளியிட்டதற்கு மிக்க நன்றி! D.Ravichandran/ADS/NFTE/CDM.

    ReplyDelete