.

Friday, September 13, 2013

அவசர மாவட்ட செயற்குழு - சிதம்பரம் -12-09-2013

                     கடலூர் மாவட்ட அவசர செயற்குழு 12-09-2013 அன்று சிதம்பரம் தில்லை கோவிந்தராஜன் திருமண மண்டபத்தில் மாவட்ட தலைவர் R செல்வம் தலைமையில் நடைபெற்றது.



தேசிய கொடியை முன்னாள் மாநில தலைவர் S தமிழ்மணியும் சம்மேளன கொடியை சிதம்பரம் கிளை தலைவர் H  இஸ்மாயில் மரைக்காயரும் ஏற்றினர் .
மாவட்ட துணை தலைவர் P அழகிரி அஞ்சலியுரையாற்றினார் 
மாவட்ட உதவி செயலர் D ரவிச்சந்திரன் வரவேற்புரையாற்றினார்.
சம்மேளன செயலாளர் G ஜெயராமன் தனது துவக்கவுரையில் சிரியாவில் ஏற்பட்டுள்ள  சூழ்நிலையை பற்றியும் இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி பற்றியும் பேசினார்.








மாவட்ட தலைவர் R செல்வம் நமது மாவட்ட பிரத்யோகமான சூழ்நிலையை பற்றி குறிப்பிட்டு  தலைமையுரையாற்றினார் 
மாவட்ட செயலர் இரா ஸ்ரீதர் ஆய்படுபொருளை அறிமுகபடுத்தி நமது மாவட்ட பிரச்சினைகளை விரிவாக எடுத்துரைத்தார் 
நமது இணையதளத்தில் வெளியிடபட்டிருந்த மாவட்ட சங்கத்தின் நிதிநிலை அறிக்கை அனைவருக்கும் வழங்கப்பட்டது.
மூன்றில் இரண்டு பங்கு செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு ஆய்படுபொருள் குறித்து பேசினர் 
மாநில உதவி தலைவர் V லோகநாதன் ,சிரில் அறக்கட்டளை தலைவர் K சீனிவாசன், PEWA தோழர் V நல்லதம்பி ஆகியோர் வாழ்த்துரையாற்றினர்  






சிறப்புரையாற்றிய மாநில அமைப்பு செயலர் V  மாரி தனது அழகு தமிழில் போர்குணம் கொண்ட நமது மாவட்டத்தை வாழ்த்தியும் BSNL /MTNL  குறித்த Group Of Ministers கூட்டத்தை பற்றியும் தோழர் குருதாஸ் தாஸ் குப்தா அவர்கள் மத்திய தொலைதொடர்புதுறை அமைச்சருக்கு BSNL புனரமைப்பு குறித்து எழுதிய கடிதத்தை பற்றியும் விரிவாக குறிப்பிட்டார் 

சிறப்புரையாற்றிய மாநில உதவி செயலர் K நடராஜன் தஞ்சை தமிழில் அமைப்பு பிரச்சினைகளை பற்றியும் BSNL வளர்ச்சி பற்றியும் மத்திய செயற்குழு பற்றியும் குறிப்பிட்டார் 

இறுதியாக அனைவரின் உணர்வுகளையும் பிரதிபலளிப்பதாய் அமைந்தது மாவட்ட செயலரின்  தொகுப்புரை.

நிறைவாக மாவட்ட பொருளாளர் A சாதிக் பாட்சா நன்றியுரையாற்றினார்

சிறப்பான ஏற்பாடுகளை செய்த சிதம்பரம் கிளைக்கு நமது பாராட்டுக்கள் .காலை தேநீர் ஏற்பாடு செய்த D ரவிச்சந்திரன்  மாலை தேநீர் வழங்கிய K கிருஷ்ணகுமார் சுண்டல் வழங்கிய V.கிருஷ்ணமூர்த்தி குடிநீர் வழங்கிய K.நாவு ஆகிய தோழர்களுக்கு நன்றிகள் 

தீர்மானங்கள் விரைவில் வெளியிடப்படும் .

No comments:

Post a Comment