.

Saturday, March 16, 2013

இன்னும் எத்தனை காலம் ...

கில இந்திய தலைவர் நம்பூதிரி மற்றும் துணைத் தலைவருடன் கடந்த மார்ச் 12 அன்று டெலிகாம் தொழிற்சாலை பொதுமேலாளர் திரு ராஜேஸ் குமார் அவர்களை டெல்லி தலைமை அலுவலகத்தில் சந்தித்து டெலிகாம் தொழிற்சாலைகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்து விரிவாக விவாதித்தனர் என்கிறது அந்த சங்கத்தின் இணைய தளம்.  சங்க பிரதிநிதிகள் சில மிக மிக முக்கியமான பிரச்னைகள் அதுவும் கடந்த தேசிய குழுக்கூட்டத்தில் எடுக்கப்பட்டவை நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதாம். அத்தோடு மும்பை டெலிகாம் தொழிற்சாலை பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படாதது குறித்து குறிப்பிட்டு விரைவில் பதவி உயர்வு வழங்குமாறு கேட்கப்பட்டதாம்.  இவை செய்திகள்.

நமது கேள்வி கடந்த 8 ஆண்டு அங்கீகார காலத்தில் மிக மிக முக்கியமான டெலிகாம் தொழிற்சாலை பிரச்னைகள்  பற்றி தேசிய குழுவின் கடைசி கூட்டத்தில் தான் பேச முடிந்ததா?  அங்கு பேசி முடிவு காண முடியாமல் போனது ஏன்?  தேசிய குழுவில் பேசி தீர்வு காண முடியாத பிரச்னைகளை ஒரு பேட்டியில் தீர்வு காண முடியுமா? யாரை திருப்திப் படுத்த இந்த நாடகம்?  டெலிகாம் தொழிற்சாலை பிரச்னைகளை அக்கறையுடன் தீர்வுகாண தங்கள் சங்கம் முயற்சி செய்வதாகக் காட்டிக் கொள்வது தேர்தல் கால தேவை என்பது புரிகிறது. தொழில்பற்றி, தொழிலாளர்கள் பற்றி உண்மையான அக்கறையுடன் பல காலம்  செயல்படாமல் இருந்தார்கள் என்பதற்கான ஒப்புதல் வாக்கு மூலமே அவர்களின் இணையதளச் செய்தி.  மீண்டும் மீண்டும் சிரிப்பு பார்க்கலாம் ரசிக்கலாம். ஆனால் வீணாகப் பொழுதைக் கழித்தவர்களுக்கு மீண்டும் மீண்டும் வாய்ப்பளிக்கலாமா? எனவே NFTE க்கு வாக்களிபோம்! புதிய வரலாறு படைப்போம்!..
------------------------------------------------------------------------------------------------------
1.  ஈரோடு வலைத்தளத்தின் இன்னுமொரு கட்டுரை    Click here


2.  CHQ News  : Sewa BSNL is not the alliance partner of BSNLEU in 6th verification. GS Sewa BSNL has declared this firmly and clearly in their website. 



நன்றி: ஈரோடு வலை 

No comments:

Post a Comment