.

Saturday, March 31, 2012

மகளிர்  தின சிறப்புக்கூட்டம்  




















































































Friday, March 30, 2012




NFTE மாவட்டச் சங்கம்

31-03-2012 அன்று பணி நிறைவு பெறும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் ஓய்வு காலம் சிறக்க
வாழ்த்துகின்றோம்.

திரு. K  இளங்கோவன் AGM MARKETING  கடலூர்.
திரு. T  குமார் SDE காட்டுமன்னார் கோயில்.
திரு. B  சந்திரசேகரன் SDE கடலூர்
திரு. D  நேசமணி SDE செஞ்சி
திரு. K  முத்துசாமி TM சின்ன சேலம்
திரு. N  குமாரசாமி TM விருத்தாசலம் .


தோழமையுடன்
P சுந்தர மூர்த்தி
 மாவட்ட செயலர்




Thursday, March 29, 2012

மகளிர் தின விழாவில் பங்கேற்று சிறப்பித்த சம்மேளனச் செயலர்
தோழர் G ஜெயராமன் , மாநில சங்க நிர்வாகிகள் N அன்பழகன் , R ஸ்ரீதர் , AIBSNLEA மாவட்ட செயலர் P வெங்கடசன், TMTCLU மாவட்டச் செயலர் S ANANTHAN , தோழர் BR மற்றும் கடலூர் கிளைச்செயலர்கள், மாவட்ட கிளைச் சங்க முன்னணித் தோழர்கள் , விழுப்புரம் பகுதியிலிருந்து பங்கேற்று சிறப்பித்த தோழியர்கள் அனைவருக்கும்  மாவட்ட  சங்கத்தின் சார்பாக நன்றி.    

                                                                                            தோழமையுள்ள ,       
                                                                                             P  சுந்தர மூர்த்தி
                                                                                             மாவட்ட செயலர் .



Monday, March 26, 2012

மகளிர் தின சிறப்புக்கூட்டம்  




Saturday, March 17, 2012

T.T.A போட்டித் தேர்வு - பயிற்சி வகுப்புகள்

அன்பார்ந்த தோழர்களே! தோழியர்களே!!


T.T.A போட்டித் தேர்வுகளில் பங்ககேற்கும் ஊழியர்களுக்கு உதவுவதற்காக, இன்று 17/03/2012 முதல், மே மாதம் வரை, ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளிலும், முழு நேர பயிற்சி வகுப்புகள், கடலூர் தொலைபேசி நிலையத்தில் (ஹிந்திப் பிரிவு) நடைபெற உள்ளது. தேர்வெழுதும் அனைவரும் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.  மேல் விபரங்களுக்கு, மாவட்டச் செயலர் தோழர் சுந்தரமூர்த்தி அவர்களை தொடர்புகொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.


மாவட்டச் சங்கம்.

Thursday, March 15, 2012

மாநிலச் சங்கத்திற்கு நன்றி!

 "தானே" புயலினால் பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு,  வட்டியில்லா கடனாக ரூ. ஐந்தாயிரம் மட்டுமே தர முன்வந்த மாநில நிர்வாகத்துடன், விடாப்பிடியாக பிரச்சினையைப் பேசி, முன்பு ஒத்துக் கொண்டது போலவே, ரூ.10,000/- முன்பணம் பெறுவதற்கு, உதவிய நமது மாநில சங்கத்திற்கு நமது மனமார்ந்த நன்றி!
மாவட்டச் சங்கம்.

Wednesday, March 7, 2012

மார்ச் – 8, சர்வதேச மகளிர் தினம்




பெண்கள் அறிவை வளர்த்தால் – வையம்
பேதமை அற்றிடுங் காணீர்!

அன்னை மூட்டிய தெய்வமணிக் கையின்
ஆணை  காட்டில் அனலை விழுங்கிடுவோம்
கன்னத்தெ முத்தங்கொண்டு களிப்பினும்
கையைத் தள்ளும் பொற் கைகளைப் பாடுவோம்!
                                                   -பாரதி

மகளிர் அனைவருக்கும் “மகளிர் தின’ வாழ்த்துக்களைத்
தெரிவித்துக் கொள்கிறது!
                                 -மாவட்டச் சங்கம் - NFTE

Click here to get printout

Tuesday, March 6, 2012

இன்னும் எத்தனை காலம்தான்......

அங்கீகரிக்கப் பட்ட சங்கம் சொல்கிறது........ ...


தொலை தொடர்பு இலாக்கா, NE12 சம்பள விகிதத்திற்கு ஒப்புதல் அளிக்கும் பொழுது,  NEPP புரோமோஷன் பாலிஸியிலும் தக்க மாறுதல்களை மேற் கொள்ளுமாறு சொல்லிவிட்டதாம். 


NEPP புரோமோஷன் பாலிஸி, போர்ட் ஆஃப் டைரக்டர்களின் ஒப்புதலோடு நிறைவேற்றப்பட்டதால், அதில் ஏற்படுத்தப்படும் மாறுதல்களுக்கும் போர்ட் ஆஃப் டைரக்டர்களின் ஒப்புதல் வேண்டுமாம். எனவே NE12 சம்பளம் பெறுவது இன்னும் தாமதமாகுமாம்.  எனினும் விரைவாக(!) உத்தரவைப் பெறுவதற்கு முயற்சி எடுக்குமாம்.


ஆயிரமாயிரம் சீனியர்கள் மாதந்தோறும் பணி ஓய்வு பெற்றுக் கொண்டிருக்கிறார்கள்; NE12 - வினால் கிடைக்கும் அற்ப பலனைக் கூட இழந்து கொண்டு! அதனால் என்ன? BSNLEU உத்தரவினைப் விரைந்து பெறுவதற்கு முயற்சிக்கும் எனச் சொல்லிவிட்டதே! 


காத்திருங்கள்.. காத்திருங்கள்.  இன்னமும் காத்திருங்கள். ஒருவேளை இது  கூட சாதனை லிஸ்டில் சேருகிறதோ என்னவோ?

Thursday, March 1, 2012

BSNL tablet

 BSNL டேப்லட்டுக்கு 1 லட்சம் ஆர்டர்கள் குவிந்தது!

தொலைபேசி மற்றும் ஆன்லைன் மூலமாக 1 லட்சம் ப்ரீ ஆடர்களை பெற்றுள்ள பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 3 புதிய குறைந்த விலை டேப்லட்கள். புதிய தொழில் நுட்பம் கொண்ட ஆயிரம் ஆயிரம் டேப்லட்கள் இப்போது விற்பனை சந்தையில் இடம் பெற்று வருகிறது. இதில் 3 புதிய குறைந்த விலை கொண்ட டேப்லட்களை வெளியிட்டு உள்ளது பிஎஸ்என்எல் தொலை தொடர்பு நிறுவனம்.
இதை தொடர்ந்து குறைந்த விலை கொண்ட இந்த 3 புதிய டேப்லட்களும் 1 லட்சம் ப்ரீ ஆடர்களை பெற்று இருப்பதாக பேன்ட்டல் டெக்னாலஜியின் மேனேஜிங் டைரக்டரான வீரேந்திர சிங் கூறியுள்ளார்.
உயர்ந்த தொழில் நுட்பமாக இருக்க வேண்டும் அதே சமயம் குறைந்த விலை கொண்டதாகவும் இருக்க வேண்டும் என்று மக்கள் எதிர் பார்க்கின்றனர். இதை மனதில் கொண்டு பல நிறுவனங்கள் இதற்கு தகுந்த வகையில் தொழில் நுட்பங்களை உருவாக்கி வருகின்றனர்.
பென்ட்டா ஐஎஸ்-701-ஆர் டேப்லட் ஆன்ட்ராய்டு 2.3 ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டு இயங்கும். இதில் 1 ஜிகாஹெர்ட்ஸ் பிராசஸர் பொருத்தப்பட்டுள்ளது. தகவல்களை தெளிவாக காண இதில் 7 இஞ்ச் திரையையும் இந்த டேப்லட் வழங்கும். 3,000 எம்ஏஎச் பேட்டரியினை பெற்றுள்ள இந்த டேப்லட் விஜிஏ முகப்பு கேமராவினையும்
கொடுக்கும்.
பென்ட்டா டிபேட்_டபிள்யூஎஸ்-704-சி டேப்லட்டும் 7 இஞ்ச் திரை வசதியினை வழங்கும். இதன் மூலம் 3ஜி நெட்வொர்க் வசதியினையும் பெறலாம். மூன்றாவது டேப்லட்டான பென்ட்டா டிபேட் டபிள்யூஎஸ்-802-சி டேப்லட் 8 இஞ்ச் திரையை கொண்டுள்ளது. மற்ற 2 டேப்லட்களையும்விட இந்த டேப்லட் சற்று அதிகமான திரை வசதியை
கொடுக்கும். இதில் 2 மெகா பிக்ஸல் கேமராவும் உள்ளது.
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் இந்த 3 புதிய டேப்லட்களும் மார்ச் 1-ஆம் தேதியில் இருந்து டேப்லட் மார்கெட்களில் கிடைக்கும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த டேப்லட்கள் ரூ.3,499 விலையில் இருந்து ரூ12,500 விலை வரையில் கிடைக்கும்.

சொசைட்டி செய்திகள்


கூட்டுறவு சங்கத்தின் நிர்வாகக் காரணங்களினால், மணைகள் வாங்குவதற் கான விருப்பக் கடிதங்களைப் கொடுக்கும் கால அவகாசம், 15/03/2012 வரை நீட்டிக்கப் பட்டுள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்!


தோழமையுடன்
அன்பழகன் 

நன்றி தோழர்களே! தோழியர்களே!

 நமது மாவட்டத்தில் 700-க்கும் மேற்பட்ட தோழர்கள் 28/02/2012 வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.  அவர்கள் அனைவருக்கும் மாவட்டச்சங்கம் தனது நன்றியினையும், வீர வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறது.

மாவட்டச் சங்கம்