.

Saturday, May 28, 2011

அனைத்து பொது மேலாளர்களுக்கும், நமது புதிய C.M.D திரு. உபாத்யாய் அவர்கள் எழுதியுள்ள கடிததின் சாரம்:

ஈட்டும் ஆண்டு வருமானத்தைப்
பொறுத்து, BSNL மாநிலங்கள் (CIRCLES) மூன்று வகையாகப் பரிக்கப்படும். 


(அ) ரூபாய் 2000 கோடிக்கு மேல் வருமானம் ஈட்டுபவை.
(ஆ) ரூ.1000 கோடியிலிருந்து 2000 கோடி வரை வருமானம் ஈட்டுபவை.
(இ)  ரூ. 1000 கோடிக்கு கீழாக வருமானம் ஈட்டுபவை.


மாநிலங்களின் செயல்பாடுகள்,  ஈட்டும் வருமானத்தின் அடிப்படையில் கூர்ந்து கவணிக்கப்படும். சிறப்பாக செயல்படும் மானிலங்களுக்கு,  சில விஷயங்களில் தானே முடிவெடுக்கும் அதிகாரமும், பாராட்டும் வெகுமதியும் வழங்கப்படும்.


மாறாக மோசமாக செயல்படும் மாநிலங்களுக்கு இத்தகைய எந்த சலுகைகளும் கிடையாது என்பதோடு, விருப்பப் படாத இடங்களுக்கு மாற்றல்,  APAR - ல் இவர்களது செயல்பாடு பதியப்படுதல் போன்றவையும் உண்டு.


மேலும் நிதி ஒதுக்கீடும் அந்தந்த மாநிலங்களின் வருமானத்தின் அடிப்படையில் தான் அமையும்.


அந்த வகையில் முதல் பிரிவில் "கர்நாடகா" மாநிலமும், இரண்டாவது பிரிவில் "சென்னை தொலைபேசி " யும், மூன்றாவது பிரிவில் ஒரிஸா மற்றும் ஹிமாசலப் பிரதேச மாநிலங்களும் 2010-11 நிதி ஆண்டுக்கான பரிசுகளை, டெல்லியில், 26-05-2011 அன்று நடந்த விழாவில், பெற்றுள்ளன.

No comments:

Post a Comment